Venkat Prabhu: தற்போது எங்கு திரும்பினாலும் கோட் படத்தின் பேச்சாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சி தகவலாகவே இயக்குனர் வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உட்பட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் முதல்முறையாக மைக் மோகன் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார்.
இதையும் படிங்க: மாநாடு ஃப்ளைட் சீன்னில் நடந்த குளறுபடிகள்… சிம்புவை போட்டு படுத்திய வெங்கட்பிரபு
இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்து இருக்கிறார். இதில் ஒன்று வில்லன் வேடம் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் பட குழு அதை தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறதாம். ஒரு படத்திற்கு தேவையில்லாத ஹைப்பால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் எனவும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இப்படத்தின் பிரபலங்களும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் கொடுக்கும் பேட்டிகளை பார்க்கும்போதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாக்கி வருகிறது. அதற்கும் காரணம், தேவை இல்லாமல் ஓவராக நினைத்துக் கொண்டு படம் பார்க்க வந்தால் அதுவும் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாகும்.
சிலவற்றை தெரிந்து கொண்டு வந்தால் படத்திற்கும் நல்லது என்பதால் தான் படக்குழு சிலவற்றை ஓப்பனாக பேட்டிகளில் கூறி வருகிறதாம். இந்நிலையில் இப்படத்தில் ஆங்காங்கே காமெடியாக விஜய்க்கு என்று சில அரசியல் வசனங்கள் உள்ளே வைக்கப்பட்டு இருக்கிறதாம். அவரின் கார் நம்பரும் சிஎம் 2026 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இதுதான் மரியாதை! சூர்யா அளவுக்கு அஜித், விஜய், விக்ரம் இல்லையே.. ஆனா கொண்டாடுறது?
இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது, எங்களுக்கும் அரசியலில் விஜய் சார் எண்ட்ரி கொடுக்க இருப்பது அரசல் புரசலாகவே தெரியும். கோட் திரைப்படம் முடிந்து இரண்டு வருடம் பிரேக் எடுக்கப் போவதாக தான் எங்களிடம் கூறியிருந்தார்.
ஆனால் நாங்களும் அந்த அறிக்கையில் தான் அவர் இன்னொரு படத்தை முடித்துக் கொண்டு மொத்தமாக சினிமாவிலிருந்து வெளியேறுவதை தெரிந்து கொண்டோம். உச்ச நடிகருக்கு எங்களால் முடிந்த சின்ன வாழ்த்தாகவே அதை செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து பார்க்கும்போது விஜய் தளபதி 70க்கு பின்னர் சினிமாவிலிருந்து மொத்தமாக வெளியேறுவதுதான் உறுதி எனவும் கூறப்படுகிறது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…