Categories: latest news

விஜய் இத கொஞ்சம் கூட யோசிக்கலயா? நெஞ்சை குத்திய கேள்வி…செய்வாரா தளபதி..?

தீவு நாடான இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. அத்தியாவசிய பொருள்களும் கிட்டத்தட்ட பன்மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரண டீ, காபி கூட நூறுகளில் விற்றுக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க மக்கள் பொருளாதார பிரச்சினையில் மாட்டிக் கொண்டி இருக்கின்றனர்.

தலை நகரான கொழும்புவில் இதை எதிர்த்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று கொண்டு வருகின்றன. அண்டை நாடுகளில் இருந்த இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளும் பொருள்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன.

இது அரசியல் பொருளாதார பிரச்சினையாக இருப்பதால் பல அரசியல் வாதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமாத் துறையை சேர்ந்த டிஆர் மற்றும் நடிகரும் அரசியல் வாதியுமான சீமானும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நிலையில் சினிமா ரசிகர்கள் “ஏன் தமிழ் சினிமாவில் இருந்து எந்த ஒரு நடிகரும் பிரபலங்களும் இதுவரை தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வில்லை” என ஆதங்கத்தில் கேட்டு வருகின்றனர்.

மேலும் குரல் கொடுக்கவில்லை என்றாலும் தங்களால் முடிந்த நிதியுதவிகளையாவது செய்யாலாமே என்றும் கூறி வருகின்றனர். குறிப்பாக ரசிகர்களின் பார்வை நடிகர் விஜயின் மீது திரும்பியுள்ளது. இலங்கை தமிழ் பெண்ணை தானே அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்? அவரே இது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ? என குமுறி வருகின்றனர் ரசிகர்கள்.

Published by
Rohini