டெபாஸிட் இல்லாமல் தான் வரப் போறாரு! விஜய் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் திடுக்கிடும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். நேற்று அவருடைய 49 வது பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்களுக்கு பட குழு சார்பாக லியோ படத்தின் முதல் சிங்கள் ட்ரீட்டாக வெளியிடப்பட்டது. அந்தப் பாடலை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
ஒரு பக்கம் விஜய் அரசியலிலும் தனது கவனத்தை திருப்பி வருகிறார். அதன் விளைவு தான் சமீபத்தில் நடந்த கல்வி விருது வழங்கும் விழா. அதுமட்டுமில்லாமல் அந்த மேடையில் அவர் பேசிய பேச்சு அனைவரையும் பிரமிக்க வைத்தது.
இதனால் மற்ற ரசிகர்களோ பிரபலங்களோ எப்படி எடுத்துக் கொண்டார்கள் என தெரியவில்லை. ஆனால் விஜய் ரசிகர்கள் விஜயை அரசியலில் கண்டிப்பாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்று பலர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரும் வலைப்பேச்சு பேச்சாளருமான பிஸ்மி விஜயின் அரசியல் குறித்து சமீபத்தில் கூறியிருக்கிறார். அதாவது விஜய் போட்டியிடுகின்ற தொகுதிகளில் முக்கால்வாசி டெபாசிட் இழந்து தான் வருவார் என பிஸ்மி கூறினார். அதாவது விஜய் அவருடைய ரசிகர்களை மட்டுமே நம்பி அரசியலுக்குள் வருகிற மாதிரி தெரிகிறது ஆனால் அது தவறு என்றும் கூறினார்.
இதையும் படிங்க : லியோ படத்தில் விஜய் சேதுபதி இருக்காரா? போஸ்டரில் சிக்கிய விஷயம்…
ஏனெனில் விஜயின் படத்தை ஒரு பத்து நாள் கூட ஹவுஸ் ஃபுல்லாக ஓட வைக்காத ரசிகர்கள் எப்படி அவரை தலைவராக்க நினைப்பார்கள்? அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் ஆறு கோடியை 20 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் அதில் விஜயின் ரசிகர்கள் என்பது மிக மிக குறைவு தான் .அதனால் இதை மட்டுமே நம்பி விஜய் அரசியலில் வருவது என்பது ஒரு ரிஸ்க் தான் என பிஸ்மி கூறி இருக்கிறார்.