Cinema News
Pushpa 3: ‘புஷ்பா 3’ல் இவரா வில்லன்? ராஷ்மிகாவுக்கு வச்ச செக்கா இருக்கே.. பாத்து பண்ணுங்கப்பா
Pushpa 3: புஷ்பா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த அல்லு அர்ஜுன் இப்பொழுது தமிழ் சினிமாவிலும் ஒரு விரும்பப்படும் நடிகராக மாறி இருக்கிறார். அந்த அளவுக்கு புஷ்பா படத்தில் அவருடைய ஸ்டைலிஷ் ஆன நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று 400 கோடி வரை வசூலில் வாரி குவித்தது.
இந்த படத்தின் வெற்றியால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது. புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் நாளை உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் பின்னணி இசை மட்டும் சாம் சி எஸ் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது .
இதையும் படிங்க: சந்திரமுகி 2 பிளாப் ஆனதுக்கு காரணமே லாரன்ஸ்தான்!.. உடைச்சி சொல்லிட்டாரே பி.வாசு!..
தயாரிப்பு நிறுவனத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு இடையில் ஏதோ ஒரு சின்ன மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் அதனாலயே பின்னணி இசை மட்டும் சாம் சிஎஸை வைத்து உருவாக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் புஷ்பா 3 படம் பற்றிய வதந்திகளும் வெளியாகி வருகின்றன .அந்த படத்திற்கு புஷ்பா தி ராம்பேஜ் என்று பெயரிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை முதலில் அணுகினார்கள். ஆனால் அந்த நேரத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு தெலுங்கில் பிரபல வில்லன் நடிகர் ஆன ஜெகபதி பாபுவையும் அணுகினார்கள் .ஆனால் தற்போது வந்த தகவலின் படி புஷ்பா திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டா வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: இனிமேலாவது திருந்துங்க!. இதை செய்யுங்க சினிமா உருப்படும்!.. பொங்கிய பிரபலம்!….
இது பற்றி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த செய்தி தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவர் கொண்டாவுக்கும் இடையில் ஏதோ கிசுகிசு ஓடிக்கொண்டிருக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன .இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய் தேவர் கொண்டாவை பற்றி மறைமுகமாக தெரிவித்து இருந்தார் ராஷ்மிகா. இதற்கிடையில் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிப்பது இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.