வாயால் வாழ்க்கையை இழந்த விஜய் தேவரகொண்டா.. அடக்கி வாசிக்க வைத்த அந்த சம்பவம்!...

by prabhanjani |
vijay devarakonda
X

நடிகர் விஜய் தேவரகொண்டா, ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் பல பெண்களின் மனதில் இடம் பிடத்தவர் விஜய் தேவரகொண்டா.

இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் அடுத்தடுத்து தோல்வியை அடைந்து வருகிறது.

இதையும் படிங்க- கடைசியாக எப்போது கசமுசா செய்தீர்கள்… அசராமல் பதிலை கூறிய விஜய் தேவரகொண்டா.!

மிக பெரிய எதிர்பார்ப்போடு, பேன் இந்தியா படமாக வெளியான லைகர் திரைப்படம், படுதோல்வி அடைந்தது. கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அடுத்ததாக விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த படம் ஓடினால் தான் விஜய் தேவரகொண்டா தனது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் வந்த சமயத்தில், விஜய் தேவரகொண்டாவிற்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினர். அப்போது, அவர் பல கல்லூரி விழாக்களுக்கும், திறப்பு விழாக்களுக்கும் வருகை தந்துகொண்டிருந்தார்.

ஆனால் சமீப காலமாக, அதை எல்லாம் தவிர்த்து வருகிறார். இதற்கான காரணத்தை செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில், வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம். அதையும் தாண்டி நடித்து வெற்றி பெற்றவர் விஜய் தேவரகொண்டா.

ஒரு முறை மேடையில் பேசும்போது, ஆந்திரா தெலுங்கானா பிரக்கவேண்டுமா வேண்டாமா என்ற பிரச்சனை ஏற்பட்டிருந்த சமயத்தில், அது குறித்து விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சாதாரணமாக கூறிய பதில், தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அது பெரும் சர்ச்சையானது.

அதற்கு அவர் விளக்கம் அளித்து மீண்டும் ஒரு அறிக்கை கூட விட்டிருந்தார். அந்த சம்பவத்திலிருந்து தான், மேடைகளில் பெரிதாக எதுவும் பேசாமல் இருக்கிறார். மேலும் அவ்வளவாக எந்த விழாக்களிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- தீவிரமாகும் நோயின் தாக்கம்! கடல் கடந்து செல்ல தயாராகும் சமந்தா – பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Next Story