ராஷ்மிகாவை திடீர் திருமணம் செய்துக்கொண்டாரா விஜயதேவரகொண்டா? இணையத்தில் தீயாக பரவும் திருமண புகைப்படம்...
நடிகை ராஷ்மிகாவும், தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவும் திடீர் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2016ம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படம் பெல்லி சூப்புலு. இப்படம் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்றது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது.
அதன் வெற்றியால் பல மொழிகளில் அர்ஜூன் ரெட்டி ரீமேக் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இவரின் நடிப்பில் பெரிதாக பேசப்பட்ட திரைப்படம் கீதா கோவிந்தம். அதில் இவருக்கும் ராஷ்மிகா மந்தனாவிற்கு இருந்த கெமிஸ்ட்ரிக்கே பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.
இருவரும் பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்ற துவங்கினார்கள். காதலிக்கிறார்கள் என அனைவரும் கிசுகிசுத்த போது கூட இரு தரப்பில் இருந்தும் எந்த பதிலும் கூறப்படவில்லை.
சமீபத்தில் கூட காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. யாரை திருமணம் செய்வீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதிலில் விஜய் தேவரகொண்டா பெயரும் இருந்தது. அதற்கு ஜான்வி விஜய் ஏற்கனவே திருமணமானவர் என ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில் தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா மாலையும், கழுத்துமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது உண்மையான புகைப்படம் இல்லையாம். ஃபேன் எடிட் புகைப்படத்தினை தான் அனைவரும் உண்மை என நினைத்து பரப்பி வருகிறார்கள்.
ராஷ்மிகா வாரிசு, புஷ்பா2 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். லைகர் தோல்வியால் விஜய் தேவரகொண்டா சிறிது இடைவேளை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.