என்னது கல்யாணமா? 'குஷி' படத்திற்கு பிறகுதான் ஆசையே வந்துச்சு - சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்

by Rohini |
sam
X

sam

தமிழ் சினிமாவில் ஒரு முடி சூடா ராணியாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை சமந்தா. பக்கா சென்னை பொண்ணான சமந்தா அனைத்து மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் தன் உடல் நிலையில் தொய்வு ஏற்பட்டாலும் அதை எதையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இதுவே சமந்தாவின் ரசிகர்களுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. இதைதான் சமந்தாவும் ஆசைப்படுகிறார். தன் ரசிகர்களுக்கு ஒரு ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என கூறுகிறார்.

இதையும் படிங்க: ஒரு படத்துக்கு பல சம்பளம்!.. வடிவேலு செஞ்ச அட்ராசிட்டியில் கண்ணீர்விட்ட தயாரிப்பாளர்கள்…

அந்த வகையில் தன் உண்டு தன் வேலை உண்டு என பம்பரமாக சுற்றி வருகிறார். தற்போது சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் தன்னை ஈடுபடுத்தியிருக்கிறார் சமந்தா.

இந்த நிலையில் சென்னையில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் சமந்தாவையும் விஜய் தேவரகொண்டாவையும் பேட்டி எடுத்தனர். அப்போது சில சுவாரஸ்யமான சம்பவங்களை இருவருமே பகிர்ந்தனர்.

அப்போது சமந்தா விஜய்தேவரகொண்டாவிடம் தான் கற்ற பாடத்தை பற்றி கூறினார். விஜய் தேவரகொண்டாவுக்கு எந்தவொரு கெட்ட பழக்கமும் கிடையாதாம். ஒரு பெரிய பார்ட்டிக்கு போகும் போது கூட வைன் கூட சாப்பிடமாட்டாராம். ஜீரோ கெட்டப்பழக்கம் கொண்டவர் விஜய் தேவரகொண்டா என்று கூறி மிக நேர்மையானவர் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: மாமனார் மாதிரி இருப்பார்னு பாத்தா இது வேற மாதிரி!.. சிவ்ராஜ்குமாருக்கு பேட் பீலிங்ஸ் கொடுத்த தனுஷ்!…

மேலும் இது சொல்வதின் மூலம் நிறைய பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு விஜய்தேவரகொண்டாவை பெண் கேட்டு கூட வருவார்கள் என்றும் கூறினார். ஆனால் இந்த ஆண்டு இறுதியில் விஜய் தேவரகொண்டா திருமணம் செய்யப் போகிறாராம். அதற்கு காரணம் குஷி படம் தான் என்று சமந்தா கூறினார்.

ஏனெனில் அந்தப் படமே ஒரு புதுமணத் தம்பதிகளை பற்றித்தானாம். அதனால் இதில் நடித்ததற்கு பிறகு விஜய்தேவரகொண்டாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என ஆசை வந்துவிட்டது என்றும் உறுதியாக இந்தாண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று கூறினார்.

Next Story