ரெண்டு நடிகைகளுடன் டேட்டிங்!...மச்சக்கார பையன் சார் இந்த விஜய் தேவர கொண்டா…
மிகவும் வேகமாகவும் பிரபலமாகவும் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா மிக முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரின் படங்கள் பெரும்பாலும் காதல் சார்ந்ததாகவும் சமூகம் சார்ந்ததாகவும் இருக்கும்.
இவரின் நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் இவருக்கு ஏராளமா ரசிகைகளை பெற்றுத் தந்தது. இந்நிலையில் தற்போது லிகர் படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் முதல் முதலாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார் நடிகர் விஜய்தேவர்கொண்டா.
இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாக்கப்பட்ட இந்த படத்தை நடிகை சார்மி உட்பட மூன்று பேர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நிலையில் ஹிந்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் நடிகை ஜான்வி கபூர், சாரா அலிகான் கலந்து கொண்டனர்.
அவர்கள் இருவருக்கும் விஜய் தேவர்கொண்டாவுடன் டேட் செய்வது என்பது தான் ஆசையாம். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை அறிந்து விஜய் தேவர்கொண்டாவும் அவர்கள் இருவரையும் டேக் செய்து எனக்கும் உங்களுடன் டேட் செய்ய விருப்பம் என தெரிவித்து என்னுடைய அன்பையும் அணைப்பையும் அனுப்புகிறேன் என தெரிவித்துள்ளார்.