குஷி வெற்றியால் சந்தோஷத்தில் விஜய்!.. 100 குடும்பங்களுக்கு பெரிய தொகையை பரிசா கொடுக்கப்போறாராம்!..

by Saranya M |   ( Updated:2023-09-06 01:59:26  )
குஷி வெற்றியால் சந்தோஷத்தில் விஜய்!.. 100 குடும்பங்களுக்கு பெரிய தொகையை பரிசா கொடுக்கப்போறாராம்!..
X

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான குஷி திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வரும் நிலையில் தனக்கு அந்த குஷியை கொடுத்த மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குஷியை கொடுக்க நடிகர் விஜய் தேவரகொண்டா முடிவு செய்துள்ளார்.

முன்னதாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், லைகர் உள்ளிட்ட திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாக தனக்கு வெற்றி கிடைக்காது நிலையிலும் தன்னுடன் ரசிகர்கள் கூடவே இருந்ததால் நான் தன்னால் தற்போது குஷி படத்தின் மூலம் ஹிட் கொடுக்க முடிந்தது என நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: கிரிக்கெட் வீரருடன் காதல்!.. கல்யாணமே பண்ணாமல் சிங்கிளாக இருக்க அவர் தான் காரணம்!.. மனம் திறந்த கெளசல்யா..

இயக்குனர் ஷிவ நிர்வணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா சமந்தா நடித்த குடும்ப எண்டர்டெயினர் திரைப்படமான குஷி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. படம் வெளியான இரண்டு நாட்களில் 51 கோடி ரூபாயை வசூல் செய்ததாக அறிவித்தது. இதுவரை குஷி திரைப்படம் 60 கோடி வசூலை தாண்டி உள்ளது.

இந்நிலையில் அந்த சந்தோசத்தை மக்களுடன் சேர்ந்து கொண்டாட நினைத்த விஜய் தேவரகொண்டா படத்தின் வெற்றியில் தனக்கு கிடைத்த தொகையில் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பரிசாக வழங்கப் போவதாக தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நல்லவேளை விஜய்சேதுபதி நடிக்கல!.. இல்லைன்னா இந்நேரம் சர்ச்சை வெடிச்சிருக்கும்.. 800 ட்ரெய்லர் ரிலீஸ்!..

ஒரு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றால் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு கார் பரிசளிப்பது கூடுதல் சம்பளம் வழங்குவது போன்றவை நடைபெற்று வரும் நிலையில் படத்தை வெற்றியடைய வைத்த மக்களுக்கு அதுவும் 100 பேருக்கு தலா 1 இலட்சம் ருபாய் கொடுப்பதெல்லாம் மனசு வேண்டும் விஜய் தேவர் கொண்டா என வீரர்கள் தற்போது அவரை வாழ்த்தி வருகின்றனர்.

யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பம் செய்யும் வகையில் ஒரு ஃபார்ம் வழங்கப்பட்டுள்ளது. அதில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தால், குஷி படத்தின் டீம் தயவுசெய்து இதெல்லாம் 100 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சினிமா அவ்ளோ பெரிய சீன் இல்லை!.. அதை விட முக்கியமானது நிறைய இருக்கு.. பொசுக்குன்னு சொன்ன எச். வினோத்!..

குஷி திரைப்படம் இரண்டாம் வாரத்தில் 100 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை சமந்தாமற்றும் விஜய் தேவரகொண்டா இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story