இனிமே வாயவே தொறக்கமாட்டேனே!.. திடீரென ஊமை சாமியாரான விஜய் தேவரகொண்டா.. என்ன மேட்டரு?..

by Saranya M |   ( Updated:2024-03-01 10:43:36  )
இனிமே வாயவே தொறக்கமாட்டேனே!.. திடீரென ஊமை சாமியாரான விஜய் தேவரகொண்டா.. என்ன மேட்டரு?..
X

2016 ஆம் ஆண்டு வெளியான நூவிலா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வரை பல படங்களில் அவர் நடித்தாலும் 2018 ஆம் ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அர்ஜுன் ரெட்டி வெற்றியை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த நோட்டா, டாக்ஸி வாலா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், லைகர் படம் வரை படுதோல்வியை சந்தித்தார்.

இதையும் படிங்க: ஃபாரீன் போய் படம் எடுத்த அஜித்!.. தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டமாம்.. அடுத்து நடந்தது தான் ட்விஸ்டு!

கடந்த ஆண்டு சமந்தாவுடன் அவர் இணைந்து நடித்த குஷி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்றும் படத்தின் வசூலில் 100 குடும்பத்துக்கு தல 1லட்சம் தருகிறேன் என்றெல்லாம் கூறி இருந்தார். ஆனால் அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் அடுத்ததாக மறுநாள் தாகூருடன் இணைந்து ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அந்த படம் வெளியாக போகிறது. சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய விஜய் தேவரகொண்டா தான் ஹிட் ஆகும் என்று சொன்னால் அந்த படம் ஃபிளாப் ஆகிவிடுகிறது.

இதையும் படிங்க: அம்பானி வீட்டுத்திருமண விழாவில் குடும்பத்துடன் ஆஜரான அட்லீ!.. ஜவான்.. ஜவான் என ஒரே கோஷம்!..

பிளாக்பஸ்டர் அடிக்கும் என சொன்ன குஷி திரைப்படம் வெறும் ஹிட் மட்டுமே அடித்தது. இனி அடுத்து என் 3 படங்களுக்கு நான் வாய் திறக்கவே போறதில்லை. இது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை. அந்த படங்களின் ரிசல்ட் என்ன ஆகிறது என பார்த்து விடுகிறேன் என பரபரப்பாக பேசியிருக்கிறார்.

அப்போ ஃபேமிலி ஸ்டார் புரமோஷன் நிகழ்ச்சியில் மிருணாள் தாகூரை தூக்கி சுத்த மாட்டீங்களா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Next Story