latest cinema news

விஜய் தேவரகொண்டாவுக்கு இது பிடிக்காது… எனக்கு மட்டும் எல்லாமே ஸ்பெஷல் – ராஷ்மிகா

நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தென்னிந்திய சினிமாவில் தொடங்கி இன்று இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கன்னடத்தில் தொடங்கிய அவரது திரைப்பயணம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. கன்னட திரையுலகில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா. இந்தப் படத்தில் சான்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், முதல் […]

நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தென்னிந்திய சினிமாவில் தொடங்கி இன்று இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கன்னடத்தில் தொடங்கிய அவரது திரைப்பயணம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது.

கன்னட திரையுலகில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா. இந்தப் படத்தில் சான்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து அஞ்சனி புத்ரா , சமக் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

2018-ம் ஆண்டு வெளியான சலோ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகாவுக்கு அதே ஆண்டில் வெளியான கீதா கோவிந்தம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். விஜய் – ராஷ்மிகா ஜோடியின் திரை கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இருவரையும் இணைத்து ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.

தொடர்ந்து டியர் காம்ரேட் , சரிலேறு நீக்கெவ்வரு , பீஷ்மா உள்ளிட்ட படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் தனது முன்னணி இடத்தை தக்கவைத்தார். 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த புஷ்பா: தி ரைஸ் திரைப்படம் ராஷ்மிகாவை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, கடந்த 2026 பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா நேர்காணல் ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியபோது, விஜய் தேவா கொண்டா எதையும் கொண்டாட மாட்டார். ஆனால் நான் எல்லாவற்றையும் கொண்டாட வேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு பிறந்தநாளும் முக்கியமானது. நாம் வயதாகிக் கொண்டிருக்கிறோம். இந்த உலகில் நமக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்பது தெரியாது. அதனால் கொண்டாட்டம் முக்கியம் என நான் நினைக்கிறேன். ஆனால் விஜய் தேவரகொண்டாவுக்கு கொண்டாட்டங்களில் பெரிய ஆர்வம் இல்லை என்று நடிகை ரஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

Author
Sai Vikas ✓

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]