---Advertisement---

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தேன்நிலவு: ரொமான்ஸ் வீடியோவில் புகுந்த விளம்பர ட்விஸ்ட்!

Published on: March 26, 2026
vijay devaragonda- rashmika
---Advertisement---

நேஷல் கிரஸ் ராஷ்மிகாவும் நடிகர் விஜய் தெவரகொண்டாவும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தனர். தென்னிந்திய ரசிகர்களே ஆவலுடன் எதிர்பார்த்த இவர்களது திருமணம் கடந்த மாதம் கோலகலமாக நடைபெற்றது. பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகினர் நண்பர்கள் என அனைவரையும் அழைத்து விருந்து வைத்தனர்.

இந்த நிலையில் விஜய்தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி தாய்லாந்தின் அழகிய தீவான கோ சாமுயில் (Koh Samui) தங்களது தேன்நிலவை கொண்டாடினர். , அதன் வீடியோவை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த விடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதில் ஒரு சுவாரஸ்யமான கமர்ஷியல் ட்விஸ்ட்டும் வைத்துள்ளனர் இந்த ஜோடி.

பொதுவாக திரைப் பிரபலங்கள் தங்களது திருமணம் மற்றும் தேன்நிலவு புகைப்படங்களை சமூகவலைதலங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வது வழக்கம். ஆனால், விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி ஒரு படி மேலே சென்று, தங்களது ஹனிமூன் வீடியோவை பிரபல சுற்றுலா நிறுவனமான Airbnb இன் விளம்பரமாக வெளியிட்டுள்ளனர்.

கோ சாமுய் தீவின் இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில், தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் நேரத்தை செலவிடும் ரொமான்டிக் காட்சிகள் இந்த வீடியோவில் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ராஷ்மிகா, Airbnb நிறுவனம் தங்களுக்கு வெளிநாட்டில் இருந்தாலும் சொந்த வீட்டில் இருக்கும் உணர்வை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களை, ஒரு சர்வதேச பிராண்டின் விளம்பர யுக்தியோடு மிக நேர்த்தியாக ம் இந்த ஜோடி இணைத்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நயன்தரா, ஹன்சிகா போன்றோர் தங்களது திருமண வீடியோவை ஓடிடி நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு விற்றனர். ஆனால் ஓடிடி நிறுவனங்கள் பெரிய விலை பேசியும் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா தம்பதி தங்கள் திருமண நிகழ்வுகளை தர மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reels/DWTCODUky1C