கலியுகத்தில் ஒரு ராமராம்!.. விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி டீசர் ஒருவழியா ரிலீஸ்!.. படம் ஓடுமா?..

0
189

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியாகவில்லை. அதன் பின்னர், 8 19க்கு வெளியிடுகிறோம் என அறிவித்திருந்தனர். என்னடா சிம்பு போல இவங்களும் கூட்டுத்தொகை 9 என வரும்படி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்களே என ரசிகர்கள் கமெண்ட் போட ஆரம்பித்தனர்.

ஆனால் அப்போதும் வெளியாகாமல் சற்று முன்பு தான் டீசர் வெளியானது. குறிப்பிட்ட நேரத்தில் டீசர் ஏன் வெளியிடவில்லை விஜய் தேவரகொண்டா என மிருணாள் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். சற்று நேரத்தில் வந்து விடும் என விஜய் தேவரகொண்டா ட்வீட் போட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனம் அந்த டீசரை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: உலக அழகியுடன் முதல் திருமணம்… கோடிகளில் சொத்து… நிக்கோலயின் இரண்டாம் மனைவியாகும் வரலட்சுமி…

டீசர் வெளியிட்ட லேயே இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் படம் வெளியானால் இந்த முறையாவது விஜய் தேவரகொண்டாவுக்கு வெற்றி கிடைக்குமா என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.

கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். கலியுகத்தில் ஒரு ராமர் என தொடங்கும் பாடலுடன் டீசர் உருவாகியுள்ளது. காமெடி மற்றும் ஆக்ஷன் என்ன டீசரில் விஜய் தேவரகொண்டா மாஸ் காட்டுகிறார். கடைசியாக கல்லூரிக்கு பைக்கில் அழைத்துப் போகச் சொல்லும் ஹீரோயின் மிருணாள் தாகூரிடம் ஒரு லிட்டர் பெட்ரோல் போட காசு இருக்கா என கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வரும் ஏப்ரல் 5ம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

இதையும் படிங்க: கில்லியில ஆரம்பிச்சது!.. கோட் வரைக்கும் மகேஷ் பாபுவை காப்பியடிக்கிறதை விடலையே விஜய்?..

கடைசியாக வெளியான லைகர் மற்றும் குஷி படங்கள் பெரிதாக போகாத நிலையில், ஃபேமிலி ஸ்டார் படத்தை விஜய் தேவரகொண்டா ரொம்பவே நம்பி இருக்கிறார்.

google news