விஜயின் டையட் ரகசியம்...! மனுஷன் எப்படி இதையெல்லாம் சாப்பிடுறாரு...?

by Rohini |
dish_main_cine
X

விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், சியாம், யோகிபாபு, சங்கீதா போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படம் ஒரு கமெர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.

vijay1_cine

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ஷோபி மாஸ்டர் நடன இயக்குனராக இருக்கிறார். பீஸ்ட் படத்தின் தோல்வியால் இந்த படத்தை பெரிது எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று தனது 48 வது பிறந்த நாளை விஜய் கொண்டாடுகிறார்.

vijay2_cine

மேலும் வாரிசு படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் மனுஷன் எப்படி உடம்பை இன்னும் அப்படியே
வைத்துள்ளார் என கேட்டு வருகின்றனர். அவர்களுக்காகவே அவரின் டையட் ரகசியம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. காலையில் இரண்டு இட்லி, சட்னி, வெள்ளரிக்காய் சாப்பிடுவாராம்.

vijay3_Cine

மதிய உணவாக சம்பா அரிசியில் சாதம், 200கி வறுத்த சிக்கன், அதோடு பச்சை காய்கறி கொஞ்சம் சாப்பிடுவாராம். இதற்கிடையில் இளநீரும் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம். இரவு உணவாக ஃபுரூட் சாலட் மட்டும் சாப்பிடுவாராம். மேலும் அவரின் பிரியமான உணவு நம்ம பாரம்பரிய தோசையுடன் சிக்கன் குழம்பு என வெளிக்காட்டியுள்ளனர்.

Next Story