கோட் ஆடியோ லான்ச் இருக்கா?!.. விஜய் எடுத்த முடிவு சரியா?!.. அவ்ளோ பயமா?!...
Goat: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய். லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஒரு விஜயை ஏஜிங் டெக்னாலாஜி மூலம் மிகவும் இளமையாக காட்டி இருக்கிறார்கள்.
டிரெய்லரிலும் இளமையான விஜய் தொடர்பான காட்சிகள் காட்டப்பட்டது. எனவே, இப்படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.
இதையும் படிங்க: அம்மாவை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய தளபதி…வெளியான பரபரப்பு வீடியோ!..
விஜய் அரசியலுக்கு போகவிருப்பதால் ஹெச்.வினோத் படமே இறுதியான படம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் விஜய் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார் என்றே சில சினிமா பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு உதாரணமாக அவர்கள் சொல்வது கமலைத்தான்.
இந்தியன் 2 என்னுடைய கடைசிப்படம் என கமல் சொன்னார். தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் சொன்னார். ஆனால், அவரின் கட்சிக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என தெரிந்தவுடன் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். இதுதான் விஜய்க்கும் நடக்கும் என்பதுதான் அவர்களின் கருத்தாக இருக்கிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு பிடித்த எண் இதுதானாம்! கூட்டிக் கழிச்சு பாருங்க.. சரியா வரும்
ஒருபக்கம், கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குமா என்கிற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில், ஆடியோ லான்ச்சில் விஜய் பேசும் விஷயம் அதிகமாக விவாதிக்கப்படும். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா மற்றும் வெங்கட்பிரபுவிடம் கேட்கப்பட்டது. அது விஜயின் முடிவு என அவர்கள் சொல்லி இருந்தார்கள்.
உண்மையில், கோட் படத்திற்கு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியே வேண்டாம் என விஜய் சொல்லிவிட்டாராம். அதற்கு காரணம் அவரின் அரசியல் கட்சி கொடியை அறிமுகம் செய்வது, விரைவில் கட்சி மாநாடு என தொடர் நிகழ்ச்சிகள் இருப்பதால் ஆடியோ லான்ச் விழாவில் எதுவும் பேச வேண்டாம் என நினைக்கிறாராம் விஜய். இன்று காலை கொடி அறிமுகம் செய்யும் விழாவும் முடிந்துவிட்டது. மாநாடு தொடார்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என அவர் சொல்லி இருக்கிறார்.
ஆனால், அரசியல்வாதி என்றாலே மக்களை சந்திப்பதுதான். அதிகம் பேசவும் வேண்டும். பேசுவதற்கே தயங்கும் விஜய் எப்படி அரசியலில் ஜொலிப்பார் எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.