வலையை விரித்த அரசியல்!. எஸ்கேப் ஆன தளபதி!. கோட் படத்தில் நடந்த பெரிய மாற்றம்!..

by சிவா |   ( Updated:2024-02-22 11:47:09  )
goat
X

நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் ஏதேனும் ஒரு அரசியல் வசனம் இருந்தாலே அது பரபரப்பாக பேசப்படும். சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் அப்படம் சந்திக்கும். சர்கார் படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயருக்காகவே ஆளும் கட்சியின் அப்போது அந்த படம் வெளியான தியேட்டர்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதேபோல், மெர்சல் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் பேசிய வசனத்திற்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி எதிர்ப்பை தெரிவித்து விஜயை கடுமையாக விமர்சனம் செய்தனர். இது எல்லாவற்றுக்கும் முன் தலைவா என்கிற படம் வெளியாகவிருந்த நிலையில் போஸ்டரில் இருந்த 'Time to lead' என்கிற வாசகம் அப்போது ஆளும் கட்சியை கோபப்படுத்த 2 நாட்கள் படம் ரிலீஸ் ஆகவில்லை.

இதையும் படிங்க: பிடிக்காத வரியால் வெறுப்பான கமல்… சமரசம் செய்த வைரமுத்து… ரசிகர்களைக் கொண்டாட வைத்த பாடல்…!

இப்படி பல எதிர்ப்புகளையும் விஜய் சந்தித்திருக்கிறார். எனவேதான், அரசியல் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அவர் இருந்தார். மெர்சல் படத்தில் அவர் பேசிய வசனத்திற்காக மாஸ்டர் பட படப்பிடிப்புக்காக நெய்வேலியில் விஜய் இருந்தபோது வருமான வரித்துறையினர் அவரை விசாரணை என்கிற பெயரில் சென்னை அழைத்து வந்து அலைக்கழித்தனர்.

இதனால் ஏற்பட்ட கோபத்தில்தான் விஜயை நாமும் அரசியலில் இறங்க வேண்டும் என்கிற முடிவை எடுத்தார் என சொல்லப்படுகிறது. விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்காட்சியை இலங்கையில் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெங்கட்பிரபு. இதற்காக இலங்கை சென்று ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தையும் பார்த்து வந்தார்.

இதையும் படிங்க: ரெண்டு பட ஹிட்டுக்கே இத்தனை கோடியா? கவின் கேட்கும் சம்பளத்தால் தெறித்தோடும் கோடம்பாக்கம்

மேலும், யுவன் சங்கர் ராஜாவும் முத்தையா முரளிதரனை சந்தித்து இது தொடர்பாக பேசியிருந்தார். ஆனால், விஜய் இலங்கை சென்றால் அங்குள்ள ஆளும் கட்சியினர் விஜயை தங்களுக்கு ஆதரவாளர் போல காட்டிக்கொள்வதற்கு பல திட்டங்களை போட்டு வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்ப்பட்டது.

இதைபுரிந்து கொண்ட விஜய் ‘இலங்கை வேண்டாம்.. வேற இடத்தில் கிளைமேக்ஸ் காட்சியை எடுப்போம்’ என வெங்கட்பிரபுவிடம் சொல்லிவிட்டாரம். எனவே, புது இடத்தை பார்க்கும் வேலையில் வெங்கட்பிரபு இறங்கியிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

Next Story