விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறிவிட்டார். விஜய்க்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்கிற ஆசை சினிமாவில் நடிக்கும்போதே இருந்ததாக அவருடன் பல படங்களில் நடித்த நடிகரும், விஜயின் நண்பருமான தாமு சொல்லியிருந்தார். ஆனால், விஜய் அதை எங்கேயும் வெளியே சொன்னதில்லை.
30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்துவிட்டு இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தன்னால் கொண்டு வர முடியும் எனவும் விஜய் நம்புகிறார். அதனால்தான் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என தொடர்ந்து சொல்லி வருகிறார், இந்நிலையில் விஜயை வைத்து பகவதி என்கிற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கடேஷ் ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார்.
பகவதி படத்தில் வரும் முதலமைச்சர் கதாபாத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு விஜயை கூப்பிட விஜய் ‘இல்லை வேண்டாம்’ என மறுத்து விட்டு செல்வார்.. ஆனால் அவர் தேர்தலில் நின்று முதலமைச்சராக பதவி ஏற்பது போல சூழல் வருவது போலத்தான் ஒரிஜினல் கிளைமாக்ஸ் இருந்தது.. ஆனால் ஷூட்டிங் சமயத்தில் பாபா படம் பார்த்தேன். அந்த படத்தில் இறுதியில் ஏழாவது மந்திரத்தை சிஎம் ஆவதற்கு ரஜினி உபயோகிப்பாரென ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவரது பயன்படுத்த மாட்டார்.. ரஜினி சாரே இதை மறுக்கிறார்.. நாம் இப்போதுதான் விஜயை ஆக்சன் ஹீரோவாக மாற்ற முயற்சி செய்கிறோம்.. இதில் சிஎம் ஆவது போல் சீன் வைத்தால் அது ஓவர் டோஸ் ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.. இதை விஜய் சாரிடம் சொன்னேன்.. அவரோ கோபப்பட்டார்.. ‘கதை சொல்லும் போது அப்படித்தான் சொன்னீங்க.. இப்ப ஏன் மாத்தினீங்க?..’ என்று அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
அதன்பின் ‘இப்பதான் ஆக்சன் ஹீரோவா மாறிக்கிட்டு இருக்கீங்க.. உடனே ஓவர் பில்டப் பண்ணா நல்லாருக்காது.. பியூச்சர்ல அத பண்ணலாம்’ என சொல்லி அவரை சமானம் செய்தேன்’ என சொல்லியிருக்கிறார்.
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…
இன்ஸ்டாகிராம் மூலம்…
நடிகராக இருந்து…