Connect with us
vijay_main_cie

Cinema News

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா…? டபுள் ஆக்ட்டில் கலக்கும் விஜய்…சென்னையில் தொடங்கும் தளபதி 66 சூட்டிங்..

விஜய் நடிப்பில் இன்னும் தலைப்பே வைக்காத படத்தை தோழா பட இயக்குனர் வம்சி இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு தற்போது தளபதி 66 என்றே பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா, ஷியாம், சங்கீதா, தெலுங்கு ஹீரோ ஸ்ரீகாந்த் உட்பட பல நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

vijay3_cine

இந்த படத்தின் முதல் கட்டப்பட பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. விஜயும் ராஷ்மிகாவும் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பு காட்சிகளில் நடித்தனர். அண்மையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரம்மாண்டமான செட் போட்டு நடைபெற்றது. விஜய், பிரகாஷ்ராஜ் காம்பினேஷன் காட்சிகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டனர். மீதமுள்ள மற்ற நட்சத்திரங்கள் காட்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

vijay2_cine

இந்த படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம் என சில தகவல் வெளியாகி வருகிறது. அதனால் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாவதால் இரண்டு நாள்களுக்கு முன்பே விஜய் சென்னையை வந்தடைந்தார். வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

vijay1_cine

ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்த நாள் என்பதால் அந்த நாளில் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகிறது. ஏற்கெனவே சமீபத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த பிகில் படம் வெற்றிகரமாக ஓடியது. அதன் பின் இந்த படத்திலும் இரட்டை வேடம் என்ற தகவல் அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top