ஷூட்டிங்கை பாதியில நிறுத்தி விஜய் செய்த காரியம்.! நடிகை கூறிய ரகசிய தகவல்...
செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் புதுமுக நடிகர் ரவிகிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது வரையில் பலரது பேவரைட் திரைப்படமும் கூட.
இந்த திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் நா.முத்துக்குமார் எழுதியிருப்பார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை ஆல்டைம் ஃபேவரைட். பலரது காலர் டியூன்களாக, ரிங்க்டோனாக தற்போது வரையில் ஒலித்து கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே, சோனியா அகர்வால், விஜயுடன் இணைந்து மதுர எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார். அந்த படம் சூட்டிங் வெளிநாட்டில் நடைபெற்றது.
அப்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்த சமயம் அது, அந்த நேரத்தில் பாடல்காட்சி இடைவெளியில் விஜய் காருக்குள் ஓடிச்சென்று பாடல்களை கேட்டு கொண்டிருந்தாராம்.
இதையும் படியுங்களேன் - இந்த படம் மட்டும் ஓடலனா சினிமாவை விட்டே ஓடி போயிடுவேன்..! சபதம் போட்ட திரிஷா.!
அப்போது நடிகை சோனியா அகர்வால், விஜய் என்ன பாடல் கேட்டுக்கொண்டிருந்தார் என்று பார்க்கையில் அவர் 7ஜி ரெயின்போ காலனி பாடலை கேட்டுக்கொண்டிருந்தாராம். இந்த தகவலை நடிகை சோனியா அகர்வால் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா - நா முத்துக்குமார் பாடல்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.