ஒன்னு கூடிட்டாய்ங்ப்பா!. குடும்பத்துடன் கோட் படம் பார்த்த விஜய்?!.. ஆச்சர்ய தகவல்!...
Goat: நடிகர் விஜய் லண்டனில் வசித்து வந்த தமிழ் பெண்ணான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அடிப்படையில் சங்கீதா விஜயின் ரசிகையாக இருந்தார். விஜயை சந்திக்க ஆசைப்பட்டு அவர் ஒருமுறை விஜயின் வீட்டிற்கு அவர் வந்தபோது எஸ்.ஏ.சி அவரை பற்றி விசாரித்து முறைப்படி இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்தது.
சங்கீதாவின் பெற்றோர்கள் இப்போதும் லண்டலினிலேயே வசிக்கிறார்கள். விஜய்க்கு ஒரு மகன், மகள் என அழகான குடும்பம். ஆனால், கடந்த சில வருடங்களாக விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள பங்களாவில் தனிமையில் வசித்து வருவதாகவே சொல்லப்படுகிறது. விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
அதாவது, மகன், மகளுடன் சங்கீதா லண்டனில் தனது பெற்றோருடன் வசிப்பதாக கூறப்பட்டது. முன்பெல்லாம் விஜய் கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு சங்கீதா வருவார். ஆனால், கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிக்கும் படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடியவில்லை. விஜயின் மகன் சஞ்சய் இயக்குனராகிறார் என செய்தி வெளிவந்தபோதும் விஜய் அதுபற்றி டிவிட்டரில் கூட அதுவும் பதிவிடவில்லை.
ஒருபக்கம், விஜய் திரிஷாவுடன் நெருக்கமாக இருப்பதால்தான் சங்கீதா விஜயை விட்டு பிரிந்து போய்விட்டார் என்கிற வதந்தியும் இருக்கிறது. ஆனால், இதுபற்றி விஜயும் சரி, திரிஷாவும் சரி எங்கும் பேசுவதில்லை. ஒருபக்கம், விஜயும், திரிஷாவும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாவதுண்டு.
கோட் படத்திலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் திரிஷா. கோட் படம் ஒன்று உலகம் முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். ஆனால், பொதுவான ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
இந்நிலையில், சென்னை அடையாறில் விஜய் தனது மனைவி சங்கீதா, மகன், மகள், பெற்றோர்கள் மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, சினேகா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படகுழுவினருடன் நேற்று இரவு கோட் படத்தை பார்த்து ரசித்ததாக செய்திகள் கசிந்திருக்கிறது.
இதையும் படிங்க: தலைவன் வேற ரகம்! படக்குழுவே இப்படி யோசிக்கல.. ‘கோட்’னா என்னனு காட்டிய கூல் சுரேஷ்