More
Categories: Cinema News latest news

அரசியல் பிரவேசத்தின் ஆரம்பத்திலேயே இவ்ளோ பெரிய சிக்கலா? சமாளித்து ஜெயிப்பாரா விஜய்?

விஜய் தமிழ்சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர். ஏகப்பட்ட ரசிகர்களைத் தன்வசப்படுத்தி வைத்துள்ளார். இவர் சினிமாவில் செய்த ஸ்டைலைப் போல அரசியலில் காட்ட வாய்ப்பில்லை. இது ரசிகர்களைப் பொறுத்தவரை இழப்பு தான்.

அரசியலில் குதித்துப் பார்த்தால் தான் அதன் ஆழம் நமக்குத் தெரியும் என்று தைரியமாக இறங்கியுள்ள விஜயைப் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் வந்த நாள் முதல் எந்த அறிக்கையும் கொடுக்காதது ஆச்சரியம் தான். ஆர்ப்பாட்டம், போராட்டம் என்றும் எதிலும் இறங்கவில்லை.

Advertising
Advertising

கட்சி ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் தூத்துக்குடி மாவட்ட செயலாளரான பில்லா ஜெகனை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக சுமன் என்பவரை மாற்றியுள்ளாராம். இவரது ரசிகர்களாக இருப்பவர்கள் பலபேர் பல கட்சிகளில் இருப்பாங்க. அதே நேரம் பல கட்சிகளில் உள்ளவர்களும் இவரது ரசிகர்களாக இருப்பார்கள். அதனால் அவரது ரசிகர்கள் கட்சியைப் பார்த்து அதன் நடவடிக்கைகளைக் கண்டு கொண்டு தான் கட்சியில் சேர்வார்கள்.

விஜயைப் பொறுத்தவரை இனி ரசிகர்களை சமாளிக்க வேண்டியதில்லை. ஆனால், கட்சி என்று வந்ததும் ரசிகர்கள் கட்சிக்காரர்களாகும் போது அவர்களது மனநிலையைப் புரிந்து அதற்கேற்ப அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசியலுக்கும் சினிமாவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கு. விஜயைப் பொறுத்தவரை சினிமாவில் சாதித்தது போல அரசியலிலும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளார்.

Vijay 2

ஆனால் அரசியலில் பேர் வாங்க தான் மட்டும் முக்கியமல்ல. தன்னைச் சுற்றி உள்ளவர்களும் பெரிய தலைவர்களாகவும், அறிவாளிகளாகவும், அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் தான் ஒருவர் அரசியலுக்கு வர முடியும். ஆனால் விஜய்க்கு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி யாருமில்லை. இப்படி பல வகைகளில் இப்பவே குழப்பம் நிலவி வருகிறது.

கேரளாவில் ரசிகர்கள் ரொம்பத் தெளிவா இருப்பாங்க. அங்கே நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், கவுன்சிலராவது கூட பெரிய விஷயம். அங்கு ரசிகர்கள் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு நோ என்ட்ரி சொல்லி விட்டார்களாம். அதைப் பார்த்து தமிழக ரசிகர்களும் நினைக்கலாம். இப்போது ஒரு மாவட்ட செயலாளரை மாற்றியதால் அவரைச் சார்ந்த ரசிகர்களுக்கும் அதிருப்தியை உண்டாக்கலாம்.

இதையும் தாண்டி அவரது அரசியல் மக்கள் மத்தியில் நிற்க வேண்டும். பல போராட்டங்களும் நடத்த தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி விஜய் ஜெயிக்க வேண்டும். அப்படி நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகரும் யூடியூபருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts