2008 ஆம் ஆண்டு வடிவேலு கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்”. இத்திரைப்படத்தை தம்பி ராமய்யா இயக்கியிருந்தார். மாணிக்கம் நாராயணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இத்திரைப்படம் எடுத்து முடித்த பிறகு, இதனை திரையிட்டுப் பார்த்த மாணிக்கம் நாராயணனுக்கு தலைவலியே வந்துவிட்டதாம். மிகவும் மோசமான ஒரு திரைப்படமாக உருவாகியிருந்ததாம். அதே போல் படத்தில் சுத்தமாக காமெடியே இல்லையாம். அதனை தொடர்ந்து சில நகைச்சுவை காட்சிகளை எடுத்து தனியாக இணைத்து விடலாம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் வடிவேலு அதற்கு ஒத்துழைப்பு தரவில்லையாம்.
இதனை தொடர்ந்து வேறு வழியில்லாமல், படத்தை அப்படியே வெளியிட முடிவு செய்தனராம். எனினும் ஆடியோ வெளியீட்டு விழாவில் பல நட்சத்திரங்களை அழைத்தால் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமே என எண்ணியிருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.
அதன்படி விஜய்யையும் சூர்யாவையும் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அழைக்கலாம் என்று நினைத்த மாணிக்கம் நாராயணன், விஜய்க்கு தொடர்புகொண்டு தாங்களும் சூர்யாவும் வந்து ஆடியோவை வெளியிட்டால் நான் மிக்க மகிழ்ச்சியடைவேன் என கூறியிருக்கிறார். விஜய்யும் வருவதாக ஒப்புக்கொண்டாராம்.
அதன் பின் சூர்யாவை தொடர்புகொண்ட மாணிக்கம் நாராயணன், “விஜய் நிச்சயமாக வருவதாக கூறியிருக்கிறார். ஆதலால் நீங்களும் வந்தால் மகிழ்ச்சியடைவேன்” என கூற, அதற்கு சூர்யாவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் சில காரணங்களால் விஜய், “என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் வரமுடியாது” என கடைசியில் கூறிவிட்டாராம். அதன்பின் சிம்புவை தொடர்புகொண்டு, “விஜய்யை அழைத்தேன் அவர் வரமுடியாது என கூறிவிட்டார். நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும்” என கேட்டிருக்கிறார். சிம்பு உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.
அதன் பின் “இந்திரலோகத்தில் நா. அழகப்பன்” திரைப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சூர்யாவும் சிம்புவும் கலந்துகொண்டனர். அப்போது அந்த விழா நடந்த இடத்தில் இன்னொரு பகுதியில் மற்றொரு திரைப்படத்தின் விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த விழாவில் விஜய் கலந்துகொள்வதாக இருந்தது. அப்போது மாணிக்கம் நாராயணனை பார்த்த விஜய், “நீங்கள் விழாவை தொடங்குங்கள். நான் அரை மணி நேரத்தில் வருகிறேன்” என கூறியிருக்கிறார். இதை கேட்டதும் மாணிக்கம் நாராயணனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லையாம்.
விஜய் சொன்னதுபோலவே ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றுக்கொண்டிருந்த அரங்கத்துக்குள் திடீரென நுழைந்தார் விஜய். அவர் நுழைந்ததை பார்த்ததும் மாணிக்கம் நாராயணனுக்கு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டதாம்.
உடனே விஜய், மாணிக்கம் நாராயணனை கட்டி அணைத்து “அழாதீங்க, அதான் வந்துட்டேன்ல” என கூறியிருக்கிறார். எனினும் கிட்டத்தட்ட அரை மணிநேரம் அழுதாராம் மாணிக்கம் நாராயணன். அதன் பின் மூவரும் சேர்ந்து “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” படத்தின் இசைத்தட்டை வெளியிட்டார்களாம். எனினும் “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” திரைப்படம் படுதோல்வியடைந்ததுதான் இதில் சோகம்.
இதையும் படிங்க: கமல்ஹாசனை உட்கார விடாமல் அலைக்கழித்த கௌதம் மேனன்… உலக நாயகனை கடுப்பேத்திப் பார்த்த படக்குழுவினர்…
Anitha sampath:…
உலகம் முழுவதும்…
VijayTV: விஜய்…
GV Prakash:…
Kubera: துள்ளுவதோ…