More
Categories: Cinema News latest news

விஜயின் மாஸ்டர் ப்ளான்!.. ஜேசன் சஞ்சய் எண்ட்ரிக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா?!.. என்னங்க உங்க லாஜிக்!

கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்குள் எண்ட்ரியாக இருக்கும் சமயத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் அறிவிப்புகள் நிறைய விஷயங்கள் அடங்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. விஜயே இந்த விஷயத்தின் மறைவில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

லியோ படத்தில் விஜய் நடித்து முடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் லுக் டெஸ்ட்டிற்காக சமீபத்தில் விஜய் லண்டன் பயணம் செய்து இருக்கிறார். இப்படத்தில் ஜோதிகா, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க இருக்க மிகப்பெரிய எதிர்பார்ப்பினை இப்படம் உருவாக்கி இருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க : அப்பா பகை குட்டி உறவா? அஜித்தால் கடுப்பில் விஜய்… என்ன நடந்தது?

இந்த படங்களை முடித்து கொண்டு விஜய் முழுநேர அரசியலில் இறங்க இருக்கிறார். அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனால் தன் நடிப்புக்கு 3 முதல் 4 வருடம் வரை பெரிய கேப்பினை கொடுக்கலாம் என்றும் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்த நேரத்தில் ஜேசனை களமிறக்கியதற்கு பின்னணியிலும் விஜய் தான் இருக்கிறார். தான் இல்லாத சமயத்தில் தன்னுடைய ஆதரவாளர்களின் சப்போர்ட் ஜேசனுக்கு கிடைக்கும். இதனால் அவரால் முன்னணி இயக்குனராக ஒரு இடத்தினை பிடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஒரு பெரிய ப்ரேக் எடுத்துவிட்டு விஜய் வரும் போது அந்த படத்தினை ஜேசனே இயக்கலாம் என்ற தகவல்களும் உலவி வருகிறது.

இதையும் படிங்க : உலக நாயகனுக்கே உரிய தனி அங்கீகாரம்! இன்று வரை யாராலும் தொட முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டிய கமல்

இப்போது அவரை இறக்காமல் நேரடியாக 3 அல்லது 4 வருடம் கழித்து இறக்கினால் அது அப்படத்திற்கும் ஜேசன் கேரியரும் பாதிக்கப்படலாம் என்று விஜய் தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த விஷயங்கள் அனைத்துமே இன்று வரை அதிகாரமற்ற தகவல்களாகவே தகவல்கள் தெரிவிக்கிறது.

தளபதி 68 படத்தின் ரிலீசை வைத்து மற்ற தகவல்கள் அனைத்தும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட தன் தந்தை எஸ்.ஏ.சி வழியில் மகன் ஜேசனை ஒரு பெரிய இயக்குனராக்கி விட வேண்டும் என்ற திட்டத்திலே விஜய் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Published by
Akhilan