தமிழ் சினிமாவில் நல்ல ஒரு நடிகராக வளர்ந்து வந்தால், அவர்களுக்கென்று ஒரு தனி கட்டுப்பாடு எதுவும் இருக்காது. அவர்கள் எந்த வேடத்திலும் நடித்து விடலாம். ஆனால் ஒரு நட்சத்திர கமர்சியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால், அவர்களுக்கு தனி கட்டுப்பாடும் கூடவே வந்துவிடும். இப்படித்தான் நடிக்கவேண்டும், இந்த மாதிரி தான் கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்று, இப்படிபட்ட வேடங்களில் நடிக்க கூடாது.
அப்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவரது திரைப்படங்களை திருவிழாவாக கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இருந்தும், இவருக்கு ஓர் ஆசை இருந்து கொண்டே இருக்கிறதாம். அது எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை. அதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் மாஸ்டர் பட ஷூட்டிங் சமயத்தில் விஜய் கூறியுள்ளார்.
அப்போது லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தை ரிலீஸ் செய்து முடித்திருந்தார். அந்த படத்தை பார்த்த விஜய் இதே மாதிரி எனக்கும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் அப்படி நடிக்க முடியவில்லை. என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இது குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், விஜய் மாதிரியான ஒரு மாஸ் ஹீரோவை திடீரென்று கதைக்கு ஏற்ற ஹீரோவாக மாற்ற முடியாது. தற்போது மாஸ்டர் படம் இயக்கும் போது, பாதி கதை என்னுடைய சாயலில் , பாதி விஜய்க்காக செய்யப்பட்டது. அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆதலால் அடுத்த படத்தில் முழுக்க முழுக்க கதையின் ஹீரோவாக விஜய் இருப்பார் என்று சொல்லாமல் சொன்னார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இதையும் படியுங்களேன் – பயில்வானுக்கு வக்காலத்து வாங்கும் சவுண்ட் சரோஜா.!? அவர் வேலைய அவர் பண்றார்….
உண்மையில் தளபதி தற்போது நடித்து வரும் அவரது 66வது திரைப்படத்தை காட்டிலும், இன்னும் அறிவிக்கப்படாத தளபதி 67வது திரைப்படத்திற்கு தான் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. அந்த திரைப்படம் முழுக்க முழுக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப் படமாக உருவாக உள்ளது தான் இதற்கு முக்கிய காரணம்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…