Connect with us

Cinema History

அங்கேயிருந்து விழுந்தா 100 அடி பள்ளம்!.. பயப்படாமல் விஜய் செய்த சம்பவம்..

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அவரது முதல் திரைப்படமான மாநகரம் டீசண்டான வசூலை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது.

இதனால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் அளவிற்கு முன்னேறினார் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதற்குப் பிறகு கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவிலேயே யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை கொடுத்தது.

vijay leo 1

vijay leo 1

அதனை தொடர்ந்து தற்சமயம் மீண்டும் விஜய்யுடன் கூட்டணியில் சேர்த்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். லியோ திரைப்படத்தின் முதல் படப்பிடிப்பு ஜனவரி 31ஆம் தேதி காஷ்மீரில் துவங்கியது. காஷ்மீரில் பல பிரச்சனைகளுக்கு நடுவில்தான் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

ஆபத்துக்கு இடையே தளபதி:

அதையே ஒரு வீடியோவாக தயார் செய்து வெளியிட்டு இருந்தால் லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருந்தார் லோகேஷ். முதல் நாளே போகும் வழியில் கார் நின்று விட்டது. அப்போது விஜய் கீழே இறங்கி அவரே அந்த காரை தள்ளியுள்ளார். அப்போதே படப்பிடிப்பை இங்கே நடத்த முடியுமா? அல்லது சென்னைக்கு கிளம்பி விடலாமா? என்று நம்பிக்கை இல்லாமல் கேட்டுள்ளார் விஜய்.

leo loki vijay

leo loki vijay

அந்த அளவிற்கு முதல் நாளே பனிப்பொழிவு அதிகமாக இருந்துள்ளது. அவர் கார் ஓட்டி சென்ற இடத்தின் பக்கத்திலேயே நூறு அடி பள்ளம் இருந்தது. கொஞ்சம் கால் வலிக்கினாலும் கூட விஜய் அங்கிருந்து விழுந்து விடுவார் அவ்வளவு ஆபத்திற்கும் நடுவில்தான் அவர் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்று தயாரிப்பாளர் லலித் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top