Thalapathy 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தளபதி 68 படம் தயாராகிக் கொண்டு வருகிறது. படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் வெங்கட் பிரபுவிற்கு விஜய் ரசிகர் ஒருவர் ஒரு கடிதத்தை எழுதி அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். அதில் நீங்கள் இந்த கடிதத்தை பார்ப்பீர்களா என்று தெரியாது. ஒரு வேளை பார்த்தால் தளபதி 68ல் விஜயை பற்றி என் எதிர்பார்ப்பு என்ன என எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: பட பூஜை முடிந்த உடனே பரம சந்தோஷம் போல!.. தனியாக கணவருக்கு ட்ரீட் கொடுத்த நயன்தாரா.. நச் க்ளிக்ஸ்!..
அதாவது நாங்கள் விஜயை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாகவும் ஆக்ஷன் ஹீரோவாகவும் பல படங்களில் பார்த்து விட்டோம். அதே போல் ஒரு கேரக்டரை மீண்டும் பார்க்க எங்களுக்கு விருப்பம் இல்லை. தளபதி 68ல் முற்றிலும் வித்தியாசமான விஜயை பார்க்கவே ஆசைப்படுகிறோம்.
அதுமட்டுமில்லாமல் விண்டேஜ் விஜய் அல்லது பழைய படங்களின் பிரதிபலிப்பு என எதுவும் இருக்கக் கூடாது. எங்களுடைய ஆசை இதுவரை இல்லாத ஒரு விஜயாகத்தான் இருக்க வேண்டும். இதற்கு முன் அவர் நடந்தாலே ரசிகர்கள் கைதட்டுவார்கள்.
இதையும் படிங்க: தூங்காம பாத்தாலும் வெறி அடங்காது!… மொத்த அழகையும் காட்டும் யாஷிகா ஆனந்த்…
அதையெல்லாம் விட வேறு மாதிரி இருக்க வேண்டும். அதற்காக ஒரு இயக்குனராக உங்களின் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம். ஒரு ரசிகனாக இன்னும் ஒரு சில படங்களில் மட்டுமே அவரை திரையில் பார்க்க முடியும். அதன் பிறகு அவருடைய இலக்கு என்னவோ அதில் கவனம் செலுத்த போய்விடுவார்.
அதனால் அவரை ஒரு நட்சத்திர அந்தஸ்து உள்ள ஒரு ஹீரோவாக பயன்படுத்த வேண்டாம். அவருக்கு உண்டான திறமை என்னவோ அதை மட்டும் பயன்படுத்தி தளபதி 68ஐ தெறிக்க விடுங்கள் என தன் ஆசையை அந்த ரசிகர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு ரூபாய் கணக்கு பார்த்த தயாரிப்பாளர்.. எம்.ஆர்.ராதா மகன் செஞ்சதுதான் ஹலைட்!..
