ரஜினிக்கு மட்டும்தான் ஃபீல் பண்ணுவியா?!. பிரதீப் ரங்கநாதனை பொளக்கும் விஜய் ஃபேன்ஸ்!...

#image_title
Dragon pradeep: நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களை இயக்கி வந்த பிரதீப் ரங்கநாதான் கோமாளி படம் மூலம் இயக்குனராக மாறினார். ஜெயம் ரவி நடித்து நடித்து வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்துவிட்டது. தனி ஒருவன் படத்தை விடவும் கோமாளி படம் அதிக வசூலை பெற்றது.
அதன்பின் லவ் டுடே என்கிற படத்தை இயக்கி நடித்தார். இந்த காலகட்டத்தில் சிட்டியில் வசிக்கும் பெண்கள் காதலையும், காதலனையும் எப்படி கையாளுகிறார்கள் என்பதை இந்த படத்தில் காட்டியிருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. அதன்பின்னர்தான் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார்.

#image_title
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவில் 100 கோடி வசூலை தாண்டியது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினி டிராகன் பட குழுவை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ‘தலைவர் அந்த சிகரெட் ஸ்டைலை செய்து காட்டியபோது நான் காலி ஆயிட்டேன்’ என உருகியிருந்தார்.
இந்நிலையில்தான், டிராகன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பிரதீப், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் விஜயை நேரில் சந்தித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து 'இது போதும்' என உருகியுள்ளார்.

dragon1
ஆனால், பிரதீப்போ விஜயை சந்தித்தது தொடர்பான ஒரு பதிவை கூட போடவில்லை. ரஜினியுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்த பிரதீப் விஜயுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை பகிரவில்லை. பிரதீப் சினிமாவுக்கு வருவதற்கு முன் நடிகர் விஜயை நக்கலடித்து டிவிட்டுகளை போட்டு வந்தவர்.
விஜயின் ஜில்லா படம் ரிலீசான போது அப்படத்தை பார்த்துவிட்டு யுடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி ‘சமீபத்தில் வந்த திரைப்படங்களில் சிறந்த டப்பிங்’ என பதிவிட்டிருந்தார். அதற்கு ‘அடப்பாவி.. சுறா பார்ட் டூ மாதிரி டப்பிங் இருந்துச்சிடா.. உன் ரசனையோட குவாலிட்டி என்னன்னு எனக்கு தெரியும் சுறா ஃபேன்’ என நக்கலடித்திருந்தார். டிராகன் படம் வெளியான போது சிலர் இந்த ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்திருந்தனர்.

dragon3
அதேபோல், லவ் டுடே பட வெற்றிக்கு பின் விஜயை இயக்கும் வாய்ப்பும் பிரதீப்புக்கு வந்தது. ஆனால், அதை மறுத்துவிட்டு 'நான் இயக்கும் படங்களில் நான்தான் ஹீரோவாக நடிப்பேன்' என சொன்னவர்தான் பிரதீப். தற்போது விஜயை சந்தித்ததை கூட அவர் டிவிட்டரில் பதிவிடவில்லை. எனவே 'ரஜினிக்கு மட்டும் ஃபீல் பண்ற.. தளபதிக்கு போஸ்ட் போடவே இல்லை.. விஜய் மேல உனக்கு என்னடா காண்டு?’ என விஜய் ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள்.