அஜித்தால் முடியாததை சாதித்து காட்டிய விஜய்.... செம டேலண்ட்... பாராட்டி தள்ளும் ரசிகர்கள்....!
ஒவ்வொரு நடிகருக்கும் ஏதேனும் ஒரு தனிப்பட்ட திறமை நிச்சயமாக இருக்கும். அந்த வகையில் தமிழில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சிறப்பாக நடனமாடுவதோடு தனக்கு தெரியாத பிற மொழிகளை கூட மிகவும் எளிதாக சில நாட்களிலேயே கற்று கொள்ளும் திறமை கொண்டவராம்.
அதன்படி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பீஸ்ட் படம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ளதாம். இந்நிலையில் பீஸ்ட் படத்திற்காக நடிகர் விஜய் தனக்கு தெரியாத மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தானே தனது சொந்த குரலில் டப்பிங் பேசி அசத்தியுள்ளார்.
தனக்கு தெரியவில்லை என்றாலும் மிக குறைந்த நாட்களிலேயே அந்த மொழியை கற்றுக்கொண்டு தனது சொந்த குரலில் விஜய் தானே டப்பிங் பேசி அசத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜய் தற்போது முதன் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதனால் அவருக்கு மொழி பிரச்சனை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் திரையுலகை பொருத்தவரை நடிகர் விஜய்யின் போட்டியாளராக கருதப்படும் நடிகர் என்றால் அது அஜித் தான். தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்யை போலவே நடிகர் அஜித்தும் தன் மற்ற மொழி படங்களுக்கு டப்பிங் பேச பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. இந்நிலையில் தளபதி விஜய் அதை மிகவும் சாதாரணமாக செய்து அசத்தியிருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.