அரங்கத்தையே அதிரவைத்த விஜய்.....! கட்டுப்படுத்த முடியாமல் திணறிய பிரபலங்கள்....!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். விக்ரம் படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. விழாவிற்கு திரையுலகை சார்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சிம்பு, உதய நிதி உட்பட பலரும் கலந்து கொண்ட இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதையும் படிங்கள் : எப்பாஹ் சைடு View அள்ளுது…. பஞ்சுமிட்டாய் இடுப்பை இஷ்டம் போல் காட்டிய ரேஷ்மா!
விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மேடையில் நின்று அவரவர் கருத்துக்கள், அனுபவங்களை பகிர்ந்தனர். அப்போது உதய நிதி ஸ்டாலின் பேசுகையில் கமலிடம் இரு வேண்டுகோளும் வைத்தார். அரசியலுக்கும் வந்து விட்டீர்கள், ஆனால் வருடத்திற்கு ஒரு படமாவது நடிங்கள் என கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில் தளபதி விஜய் என்று பேச்சை ஆரம்பித்தபோது அரங்கமே அதிர்ன மாதிரி கூட்டத்தில் இருந்த அனைவரும் நீண்ட நேரமாக கத்திக் கொண்டே இருந்தனர்.அவரும் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் ரசிகர்கள் கூச்சலிட்டதை நிறுத்தியபாடில்லை. அப்போது கீழே உட்காந்திருந்த கமல் எழுந்து மைக்கில் கொஞ்சம் சத்தம் போடாமல் இருங்கள் பேச விடுங்கள் என்று சொன்னதுக்கு அப்புறம் தான் ரசிகர்கள் நிறுத்தினர். ஆனால் விழாவிற்கு விஜய், சூர்யா, ரஜினி போன்றோர்க்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.