விஜய் ரசிகர்கள் செஞ்ச வேலையப் பாருங்க! யாரோட மோத விடறாங்க தெரியுமா?
தமிழ் சினிமாவின் உச்ச நடசத்திரமாக இருக்கும் விஜய் தற்போது நடித்து முடித்திருக்கும் ‘பீஸ்ட்’ படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
விஜய் படம் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அமர்க்களப் படுத்துவார்கள். கூடவே, விஜய்யை அரசியல் களத்துக்கு இழுக்கும் நோக்கத்துடன் சுவாரஸ்யமான சுவரொட்டிகளை ஒட்டி அரசியல் தூண்டில் வீசி பரபரப்பை கூட்டுவார்கள்.
அந்த வகையில், ‘பீஸ்ட்’ படம் ரிலீசாக இருக்கும் இந்த வேளையில் விஜய்யை மீண்டும் அரசியலுக்கு இழுக்கும் நோக்கத்துடன் மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சினிமா உலகத்தையும், அரசியல் வட்டாரத்தை அதிர செய்திருக்கிறது!
அந்த போஸ்டரில் ‘முடிவு எடுத்தால் முதல்வர் தான்’, 2021-ல் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிப்பிடும் வகையில் ‘தளபதி’ என்றும், 2026-ல் நடிகர் விஜய் என்பதை குறிப்பிடும் வகையில் ‘தளபதி’ எனவும் குறிப்பிட்டு உள்ளதோடு, ‘2026-ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர்’ எனவும், ‘2026-ல் தளபதி மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்’ எனவும் விஜய், பிரசாந்த் கிஷோர் இருவரின் படத்தையும் அச்சிட்டு போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
ஏற்கனவே ‘தளபதி’ என்கிற அடைமொழியைப் போட்டுக் கொண்டு கட்சித் தொண்டர்களை கடுப்பேத்திவரும் நடிகர் விஜய் இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மோதும் விதமாக ‘முடிவு எடுத்தால் முதல்வர் தான்’ என்கிற இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தை அதிர செய்திருக்கிறது!