பழைய குப்பைகளை கிளறும் விஜய், ரஜினி ரசிகர்கள்.. ஜகபதி பாபு சொன்ன கீர்த்தி சுரேஷ் மேட்டர் வைரல்!..

Published on: January 5, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என வலம் வரும் ரஜினிகாந்த், விஜய், அஜித் பற்றிய வீடியோக்களை அவர்களது ரசிகர்களே தோன்றி எடுத்து எந்தளவுக்கு குப்பையை கிளறி டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு டோட்டல் டேமேஜ் செய்து வருகின்றனர்.

இளைஞர்களிடம் சோஷியல் மீடியா கிடைத்தால் அதை வைத்து உருப்படியான விஷயத்தை செய்து சம்பாதிப்பது எப்படி என்பதை சிலர் யோசித்து செய்து வரும் நிலையில், பலர் தங்கள் நேரத்தை காவு கொடுத்து எக்ஸ் தளம் சம்பாதிக்கவும் நடிகர்கள் பாக்ஸ் ஆபிஸில் மொக்கை படங்களை கொடுத்து வசூல் சக்கரவரத்தி பட்டம் வாங்கவுமே பயன்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்கு பதில் கேப்டன் சிபாரிசு செய்த நடிகர் யார் தெரியுமா? அட இவரா?

துபாயில் அஜித் டான்ஸ் ஆடும் வீடியோவை ஷேர் செய்து கேப்டன் விஜயகாந்துக்கு ஒரு இரங்கல் கூட தெரியவில்லை எப்படி ஆட்டம் போடுறாரு என விஜய் ரசிகர்கள் வெறுப்பேற்ற கீர்த்தி சுரேஷ் ஆடியோவை வெளியிட்டு விஜய்யை அஜித் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

விஜய் வீடியோக்களை ரஜினி ரசிகர்களும் ஷேர் செய்து வரும் நிலையில், பதிலுக்கு விஜய் ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் போது ஜகபதி பாபு அளித்த பேட்டியில் ஒரு சின்ன க்ளிப்பிங்கை கட் செய்து ரஜினியை டேமேஜ் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கல்லை தண்ணில போடலாமா? மீனு செத்துருமே… இதற்கா வரி விலக்கு மறுப்பாங்க… அதுவும் பிரபல நடிகருக்கு!..

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் அண்ணாத்த. ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது.

அந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஜகபதி பாபு அளித்த பேட்டியில், கீர்த்தி சுரேஷை நான் தங்கையாகத் தான் நினைத்து பழகி வருகிறேன். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது ரஜினி ஒரு முறை இவர் பொம்பளைங்க விஷயத்துல வீக், இவர் கிட்ட பேசாதன்னு சொன்னார். சரிங்க ரஜினி எனக்கு உங்களை பத்தி எல்லாம் தெரியும். நானும் சொல்லட்டா என கேட்க, அவர் அய்யய்யோ வேண்டாம் என சிரித்துவிட்டு போனார் என ரஜினிகாந்த் பம்மிய மேட்டரை எப்படி சொல்லியிருக்காரு பாருங்க ஜகபதி பாபு என விஜய் ரசிகர்கள் கேவலமான ஹாஷ்டேக்குகளை எல்லாம் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.