Home latest news டிரெய்லர் வியூஸ் போல இதுவும் ஃபேக்கா?!.. பராசக்தி 2ம் நாள் வசூல் இவ்வளவு கோடியா?!..

டிரெய்லர் வியூஸ் போல இதுவும் ஃபேக்கா?!.. பராசக்தி 2ம் நாள் வசூல் இவ்வளவு கோடியா?!..

parasakthi

1960 காலகட்டங்களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம்தான் பராசக்தி. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஷ்கரன் தயாரிக்க உதயநிதியின் ரெட்ஜெயண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டிருக்கிறது.

ஜனவரி 9ம் தேதி விஜயின் ஜனநாயகன் படமும். 10ம் தேதி பராசக்தி படமும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை திட்ட துவங்கினார்கள்.. ஒருபக்கம் சென்சாரில் சிக்கியதால் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை. பராசக்தி படம் முதல் காட்சி வெளியானபோதே நெகட்டிவ் விமர்சனங்கள் வர துவங்கின. குறிப்பாக விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பராசக்தி படத்திற்கு எதிராக களமாடினார்கள். பிரின்ஸ் படம் வெளியானபோது தியேட்டரை விட்டு வெளியே வந்த ரசிகர்கள் சொன்ன விமர்சன வீடியோக்களை பராசக்தி படத்திற்கு என எடிட் செய்து வைரலாக்கினார்கள்.

ஒருபக்கம் படத்திற்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெருமா என்கிற சந்தேகமும் வந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனமோ முதல் நாள் 27 கோடி வசூல் என அறிவித்தது. மேலும், இரண்டு நாட்களில் 50 கோடி என வசூல் என தற்போது அறிவித்திருக்கிறது. ஆனால் இரண்டாம் நாளான நேற்று தமிழகத்தில் பல தியேட்டர்களிலும் பராசக்தி படம் காத்து வாங்கியதாக செய்திகள் வெளியானது. எனவே 50 கோடியில் பாதியை கூட இந்த படம் வசூலித்திருக்காது என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ஜனநாயகனின் படத்தின் டிரைலர் வியூஸை விட பராசக்தி படத்தின் டிரெய்லர் வியூஸ் அதிகம் என யூடியூபில் காட்டினார்கள். அது மோசடியாக உருவாக்கப்பட்டது.. அது போலி என பலரும் ஆதாரத்துடன் நிரூபித்தார்கள்.. எனவே இரண்டு நாளில் இப்படம் 50 கோடி வசூல் செய்திருப்பதாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருப்பதையும் போலி என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Previous articleபராசக்தியவா வேண்டாம்னு சொன்னீங்க!.. தியேட்டர் அதிபர்களை பழிவாங்கிய ரெட் ஜெயண்ட்…
Next articleதிடீரென ராமராஜனுடன் மீட்டிங் போட்ட கனகா!.. வைரல் புகைப்படம்….