More
Categories: Cinema News latest news

விஜய் ரசிகர்களை நம்பி உள்ளே விட்டதுக்கு!.. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க.. தியேட்டர் காலி!..

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருந்தால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள நாற்காலிகளும் இப்படித்தான் உடைந்திருக்கும் என அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

கொஞ்சம் கூட கட்டுப்பாடே இல்லாமல் லியோ படத்தின் டிரெய்லரை தியேட்டரில் காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் ஏராளமான விஜய் ரசிகர்கள் குவிந்த நிலையில், அவர்களை நம்பி உள்ளே விட்ட ரோகிணி தியேட்டருக்கு தற்போது பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க: இதையும் ஃபேக் டிரெய்லர்னு கம்பு சுத்துங்க பார்க்கலாம்!.. ஆபாச வசனம் பேசும் விஜய்.. வெளுத்த ப்ளூ சட்டை!..

மெயின் ஸ்க்ரீனில் லியோ படத்தின் டிரெய்லர் திரையிடப் பட்ட நிலையில், ஒட்டுமொத்த நாற்காலிகளையும் ஏறி மிதித்து உடைத்து விஜய்யை பார்த்த உற்சாகத்தில் தியேட்டரையே தெறிக்கவிட்டு காலி செய்து விட்டனர். ஸ்க்ரீனையும் சேர்த்து கிழிக்காமல் விட்டதே பெரிய விஷயம் என்கின்றனர்.

ரோகிணி தியேட்டர் இன்சுரன்ஸ் செய்திருந்தால் கொஞ்சம் தப்பிக்கும். இல்லையென்றால், தியேட்டரை விஜய் ரசிகர்கள் இப்படி கொண்டாட்டத்திற்காக உள்ளே விட்ட நிலையில், குண்டர்களை போல அடித்து நொறுக்கி அலப்பறையை கிளப்பி இருப்பதை பார்த்து இணையமே அதிர்ந்து போயுள்ளது.

இதையும் படிங்க: போட்றா வெடிய!.. லியோ ரிலீஸ் தேதியில் திடீர் டிவிஸ்ட்!.. பி ரெடி விஜய் ஃபேன்ஸ்!…

லியோ படத்திற்கு எதனால் ஆடியோ லான்ச் மறுக்கப்பட்டது, முதல் நாள் காட்சிக்கு அனுமதி ஏன் கொடுக்கவில்லை என எல்லாவற்றுக்கும் விஜய் ரசிகர்கள் தான் மூலக் காரணம் என தெளிவாக தெரிகிறது.

படத்திலேயே சரக்கு, தம், பெண்களை அசிங்கமாக பேசுவது என விஜய்யே தறிகெட்டு திரிந்தால், விஜய் ரசிகர்கள் மட்டும் எப்படி நல்லவர்களாக இருப்பார்கள் என ராஜேஸ்வரி பிரியா மற்றும் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் விளாசி இருப்பது சரிதான் என சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts