விஜய் ரசிகர்களிடம் கொத்தா மாட்டிகிட்ட யுவன்....! விருமன் படத்துல என்ன செஞ்சி வச்சிருக்காருனு பாருங்க...
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி சங்கர் நடித்திருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
மேலும் படத்தில் சூரி, வடிவுக்கரசி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. குடும்ப பின்னனியை மையமாக வைத்து பக்கா கிராமத்து கதையாக படம் வெளிவந்திருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் இசையை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர். என்னவென்றால் விஜய் நடித்து அனிருத் இசையில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாஸ்டர். இந்த படத்தின் bgm ஐ அப்படியே விருமன் படத்தில் யுவன் கொண்டு வந்துள்ளார் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
படத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட். ஆனால் மாஸ்டர் படத்தின் bgmஐ படம் ஆரம்பத்திலயே யுவன் வைத்தது ரசிகர்களால் கண்டறிந்து இப்போது அதுதான் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.