மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தை தாறுமாறாக இயக்கி தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார். லோகேஷ் கனகராஜின் ஒர்க்கை பார்த்து வியந்த நடிகர் விஜய் மாஸ்டர் படம் பண்ணும் வாய்ப்பை கொடுத்தார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சொதப்பிய நிலையில் 50 – 50 என தனது தவறை ஒப்புக் கொள்ளாமல் விஜய் மீது பழி போட்டு வந்தார்.
அடுத்து, உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். இந்திய அளவில் பெரும் வசூலை எந்த படம் ஈட்டியது. மேலும் ஓவரசீஸிலும் கமலுக்கு பல ஆண்டுகள் கழித்து கம்பேக் கிடைத்தது.
இதையும் படிங்க: எம்ஜிஆர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை! விஷயம் அறிந்து சின்னவர் செய்த மாபெரும் செயல்
நடிகர் விஜய் மறுபடியும் லோகேஷ் கனகராஜ்க்கு அவர் விருப்பப்படி 100% படத்தை இயக்கி ஹிட் கொடுக்க ஒரு பெரிய வாய்ப்பை கொடுத்திருந்தார். ஆனால், லியோ படத்தின் இரண்டாம் பாதியையும் மீண்டும் லோகேஷ் கனகராஜ் சொதப்பி விட்டார். அது மன்சூர் அலி கான் பெர்செப்ஷன் என்றும் ஃபிளாஷ்பேக் காட்சியே பொய்யாக இருக்கலாம் என்றும் முட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்.
ஆனால், தற்போது ஃபைட் கிளப் படத்தின் புரமோஷனுக்காக வந்து பேட்டிக் கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் திடீரென லியோ படத்தின் இரண்டாம் பாதியில் பிரச்சனை என பலரும் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு பெரிய படங்களை இனிமேல் கமிட் செய்யக் கூடாது என புரிந்துக் கொண்டேன். நான் எடுக்க நினைத்ததை முழுமையாக எடுக்க முடியாமல் போய் விட்டது. தலைவர் 171 படத்திலிருந்து அந்த தவறு நடக்காது என்க் கூறியுள்ளார். அடுத்து ரஜினி படத்தை இயக்க உள்ள நிலையில், அவரை ஹேப்பியாக்கவே இந்த பேட்டியா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எனக்கு வேற பொழப்பு இருக்கு!.. புருஷன் படத்தை கழட்டி விட்ட நயன்தாரா.. ஆத்தி பூஜைக்கு கூட வரலையே!
Rajinikanth: நடிகர்…
பல பேர்…
சிறுத்தை சிவா…
ரஜினி சிவாஜி…
Sun serials:…