வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து விஜய் நடித்து வரும் படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெரிய லெந்தான பெயர் வைத்தாலும் ரசிகர்கள் கோட் என அதன் ஷார்ட் ஃபார்மிலேயே படத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர். கோட் என்றும் ஆடு என்றும் விஜய்யை அசிங்கப்படுத்தி விடக் கூடாது என்று நினைத்து தான் கடைசி நேரத்தில் டைட்டில் லீக் ஆனதும் அப்படி பெயரை நீட்டி விட்டார் வெங்கட் பிரபு.
இந்த படத்தில் தொடர்ந்து விஜய்யை வைத்து ஏகப்பட்ட பரிசோதனை முயற்சிகளை செய்து வருகிறாரா அல்லது மங்காத்தா படத்திற்கு பிறகு படம் கொடுக்காமல் விஜய் ஏமாற்றியதால் பழிவாங்கும் முயற்சியில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை.
இதையும் படிங்க: தம்பி ஓரமா போ!.. சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்த தனுஷ்!.. கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்…
மீசை எடுக்க வைத்து, பொம்மை மூஞ்சு போஸ்டரை விட்டு புதிய போஸ்டரிலும் கரியை பூசியிருக்கிறார் வெங்கட் பிரபு. மேலும், இதற்கு முன்பு வரை விஜய் படங்களில் நடித்த ஹீரோயின்களை எல்லாம் ரசிகர்கள் பார்த்தாலே மலைத்துப் போய் விடும் அளவுக்கு மப்பும் மந்தாரமுமாக நடிகைகள் தேர்வு இருந்தது.
மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, திரிஷா என வரிசையாக ரசிகர்களை சொக்க விட்ட நடிகைகள் இருந்து வந்த நிலையில், கோட் படத்தில் மீனாக்ஷி செளத்ரி என்பவரை வெங்கட் பிரபு இறக்கி இருக்கிறார். சமந்தா, பிரியங்கா மோகனன் என பெயர்கள் அடிபட்ட நிலையில், கடைசியில் மீனாக்ஷி தான் கிடைத்துள்ளார்.
இதையும் படிங்க: போஸ்டர் காசு கூட வரல!.. புலம்பும் திரையுலகம்!.. வசூலில் மண்ணை கவ்விய அயலான்!..
ஏற்கனவே விஜய் ஆண்டனியின் ஓடாத கொலை படத்தில் நடித்த அவர், அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள சிங்கப்பூர் சலூன் படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அந்த டிரெய்லரை ஆர்வத்துடன் பார்த்த விஜய் ரசிகர்களுக்கு மீனாக்ஷி செளத்ரியை பார்த்ததும் ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு என்றும் சச்சின் படத்தில் வடிவேலு சொல்வது போல நீங்க ரொம்ப சப்பை ஃபிகரு என கலாய்த்து வருகின்றனர்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…