More
Categories: Cinema News latest news

நல்லவேளை சன் ரைசர்ஸ் டீம் ஜெயிக்கலை!.. இல்லைன்னா ரஜினிதான் காரணம்னு சொல்லியிருப்பானுங்க!..

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறனின் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக தேர்வானது. ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பலப் பரீட்சை நடத்தின.

ஐபிஎல் போட்டி போன்று எந்த ஒரு விறுவிறுப்பும் இன்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வெறும் 113 ஆண்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுருட்டியது. 18.3 ஓவரில் ஒட்டுமொத்தமாக சன்ரைசர்ஸ் அணி சுருண்டது.

Advertising
Advertising

இதையும் படிங்க:விஜயை வச்சு படம் எடுத்து கடனாளியா போறீங்களா? படத்தை டிராப் செய்த தயாரிப்பாளர்

இதெல்லாம் ஒரு ஸ்கோரா என நினைத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெறும் 10.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கொடுத்து 57 பந்துகள் மீதமுள்ள நிலையில் 114 ரன்கள் அடித்து இந்த ஆண்டின் ஐபிஎல் சாம்பியனாக மாறியது.

காவியா மாறன் ஸ்டேடியத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் வைரலாகி வருகின்றன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிந்தால் இந்த ஆண்டு வெற்றி பெறும் என்றும் ரஜினிகாந்த் சொன்னது போல சிறப்பான டீமை தேர்ந்தெடுத்து பைனல்ஸ் வரை வந்த அணி தான் வெற்றி பெறும் என ரஜினி ரசிகர்கள் கம்பு சுத்திக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க:வாடிவாசல் படத்தை சூர்யாவை வைத்து ஃபிளாப் படம் கொடுத்த இயக்குனர் பண்ண நினைத்தாரா?.. வசந்தபாலன் ஷாக்!

இந்நிலையில் நல்லவேளை அந்த அணி ஜெயிக்கவில்லை என்றும் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஜெயித்து விட்டது என தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் தனது மகளை கட்டிப்பிடித்து ஷாருக்கான் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறுதிப்போட்டியில் கண்டு ரசித்தார்.

இதையும் படிங்க:கேப்டன் டிவி ஆரம்பிச்சதும் விஜயகாந்த் போட்ட முதல் கண்டிஷன்! அட இந்தளவுக்கு நல்லவரா?

Published by
Saranya M

Recent Posts