ஆடியோ லாஞ்சுக்கு ஆள் இல்லாததால்தான் ஃப்ரீ டிக்கெட்டா? - ஜெயிலரை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28ம் தேதி பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக படத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் டிக்கெட்டை பெற நாளை காலை முதலில் வருபவர்களுக்கு இலவசமாக 1000 டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகி உள்ளது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு எப்படி எல்லாம் ஆள் சேர்க்குறாங்க பாருங்க என கலாய்த்து வருகின்றனர்.

பீஸ்ட் படத்துக்கு ஆடியோ லாஞ்சே இல்லை:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் அவுட்புட்டை பார்த்து விட்டு இந்த படத்துக்கு ஆடியோ வெளியீட்டு விழா எல்லாம் தேவையில்லாத ஆணி என சன் பிக்சர்ஸ் நினைத்து விட்டதோ என்னவோ, விஜய்க்காக ஒரே ஒரு பேட்டியை மட்டும் வைத்து அந்த படத்தின் புரமோஷனை சிம்பிளாக முடித்து விட்டது.

ஆனால், அதே கூட்டணியில் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ஜெயிலர் படத்துக்கு பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை சன் பிக்சர்ஸ் நடத்தப் போவதாக அறிவித்து விஜய் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டது.

1000 டிக்கெட் இலவசம்:

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்காக ஒன்றில்லை, இரண்டில்லை ஒட்டுமொத்தமாக 1000 டிக்கெட்டுகள் இலவசமாக ரசிகர்களுக்கு வழங்கப்போவதாக அதிரடி அறிவிப்பு இன்று வெளியானது.

நாளை மதியம் 1 மணி முதல் jailer.sunpictures.in எனும் வெப்சைட்டில் முதலில் வரும் 500 நபர்களுக்கு ஒருத்தருக்கு 2 டிக்கெட்டுகள் வீதம் ஒட்டுமொத்தமாக 1000 டிக்கெட்டுகள் இலவசமாக தரப்போவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்:

தனது ரசிகர்களுக்காக நடிகர் ரஜினிகாந்த் இலவச டிக்கெட் கொடுத்து ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு வரவழைத்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் எப்படி எல்லாம் ஃப்ரீ டிக்கெட் கொடுத்து, இசை வெளியீட்டு விழாவுக்கு கூட்டத்தை சேர்க்குறாரு ரஜினிகாந்த் என்றும் இதில், குட்டிச் சுவத்தை எட்டிப் பார்த்தா உசுர கொடுக்க கோடி பேருன்னு பாட்டுல பஞ்ச் வேற என வகை வகையாக ட்ரோல் செய்து பங்கம் பண்ணி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக ஹுகும் பாடல் போட்டு அடித்த பாதிப்பு இருக்கத்தான் செய்யும் என ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களின் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story