நடிகர் விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகிலு எனக் கூறிய நிலையில் அவர் கண்டிப்பாக தளபதி 68 படத்தை முடித்துவிட்டு அரசியல் பக்கம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளையும் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக நடிகர் விஜய் ஆரம்பித்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லியோ இசை வெளியீட்டு விழாவை கலாய்த்து ரஜினி ரசிகர்கள் பேசி வரும் சூழ்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர் மற்றும் விஜய் ரசிகர் கலந்து கொண்டு விவாதித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: லியோ வெற்றி விழா எந்த டிவியில் எப்போ போடுறாங்க தெரியுமா?.. வேறலெவல் கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க!..
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் பல ஆண்டுகளாக அரசியல் என்ட்ரி கொடுப்பதாக அறிவித்துவிட்டு சினிமாவில் சம்பாதித்த நடிகர் ரஜினிகாந்த் கடைசியில் அரசியல் பக்கமே தலைவைத்து படுக்கப் போவதில்லை என்பதை அறிவித்துள்ளாரே ஏன் என்கிற கேள்வியை விஜய் ரசிகர் முன்வைத்தார்.
கொரோனா காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என ரஜினி ரசிகர் முட்டுக்கொடுத்து நிலையில் ஜெயிலர், லால் சலாம், தலைவர் 170 மற்றும் தலைவர் 171 படங்கள் எல்லாம் கொரோனாவுக்கு பிறகுதான் ரஜினிகாந்த் நடித்து வருவதாகவும் மக்கள் மீது துளியும் அக்கறை இல்லாமல் இந்த வயதிலும் பலகோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக நடிகர் ரஜினிகாந்த் வைத்திருக்கிறார் என விஜய் ரசிகர் வெளுத்து வாங்கிய நிலையில், ரஜினி ரசிகர் அதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் வாயடைத்து போன காட்சிகளை விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
ஆனால், நடிகர் விஜய்யும் அப்பா சட்டையை போட ஆசைப்படுவதை போல கடைசி வரை ரஜினிகாந்த் அரசியல் ட்ரிக்கை வைத்தே ரசிகர்களை ஏமாற்றப் போகிறாரா? அல்லது அரசியலுக்கு வருவாரா என்பதை காண காத்திருப்போம்.
இதையும் படிங்க: இந்த டிரெஸ்ல பட்டன்லாம் இல்லையாம்!.. பூஜா ஹெக்டேவை பார்த்து ஏங்கும் புள்ளிங்கோ!…