சின்னத்திரையின் இளையதளபதியா இவரு? ஐய்யயோ விஜய் அண்ணா! தாங்க முடியாமல் கதறும் ரசிகர்கள்

by Rohini |
Sanjeev
X

Sanjeev

Sanjeev : இன்றைய இளம் தலைமுறையினர் ஒரு நடிகரை தன் தலைவனாக பார்க்க ஆரம்பித்துவிட்டான் என்றால் அவனின் சுபாவங்களை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அந்த நடிகரின் சுபாவங்களை தன்னுள் ஏற்றி கொண்டு அதே மாதிரி பேசுவது, இருப்பது, நடப்பது என தனக்கு பிடித்தமான நடிகரை போலவே மாறத் தொடங்கியிருவார்கள்.

அந்த வகையில் விஜயின் ஹேர் ஸ்டைலிலிருந்து அவர் பேச்சு, நடிப்பு, அணுகுமுறைகள் என அத்தனையையும் பிரதிபலிக்கும் விதமாக சின்னத்திரையில் ஒரு நடிகர் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் வேறு யாருமில்லைங்க. விஜயின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ்தான்.

இதையும் படிங்க: விஜய்க்கு லோகேஷ்னா அஜித்துக்கு இவர்தான்! அடுத்த பட இயக்குனரை தட்டி தூக்கிய அஜித் – சம்பளத்துல தல எகிறிட்டாரே

விஜயுடன் சேர்ந்து பத்ரி, நிலாவே வா, சந்திரலேகா, மாஸ்டர் போன்ற பல படங்களில் ஒரு துணை நடிகராக நடித்திருக்கிறார். ஒரு பக்கம் திரைப்படங்கள் இன்னொரு பக்கம் சீரியல் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சஞ்சீவ் சமீபத்தில் ஒரு புதிய தொடரில் போலீஸ் கெட்டப்பில் நடித்து வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று வானத்தைப் போல. இந்த சீரியலில் சஞ்சீவ் தளபதி வீரசிங்கம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் அவர் பேசும் விதம், நடிக்கும் விதம் என அப்படியே தெறி படத்தில் வரும் விஜய்யை காப்பி அடித்த மாதிரியே தெரிகிறது.

இதையும் படிங்க: செக்கச் சிவந்த வானத்தில் ஒரு பால் நிலா!.. அய்யோ இப்படி ஓபனா காட்டி இம்சை பண்ணாத செல்லம்!..

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜயை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இப்போது இந்த சீரியலிலும் விஜய் பெயரை பயன்படுத்தியிருக்கிறார்.இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

தளபதி மேனரிசம் என்று சொல்லி என்ன என்னென்னமோ பண்ணிட்டு இருக்கிறார் என்றும் சத்தியமா முடியல என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: ப்பா.. என்னவொரு ஃபீல் குட் பாட்டு!.. விஜய்யையும் த்ரிஷாவையும் இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு!..

Next Story