Connect with us
goat

Cinema News

எல்லா பாட்டுமே மொக்கதான்!. இப்படி ஏமாத்திட்டாரே யுவன்!.. வெங்கட்பிரபு உழைப்பெல்லாம் போச்சே!…

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இப்போது நடித்தும் வரும் திரைப்படம் கோட். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் இது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விஜயின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தது குறைவான படங்கள்தான்.

புதிய கீதை படத்திற்கு பின் 20 வருடங்களுக்கு பின் கோட் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன். இதுவரை இரண்டு பாடல்கள் வெளிவந்திருக்கிறது. இதில் முதல் பாடல் விசில் போடு. இந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. வழக்கமான விஜயின் புதிய படங்களின் பாடல் வீடியோ யுடியூப்பில் வெளியானால் பல லட்சம் வியூஸ் போகும்.

goat

ஆனால், இந்த பாடல் அப்படி போகவில்லை. யுவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் ரசிகர் போய் திட்ட மனுஷன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டையே குளோஸ் செய்து விட்டு போனார். சரி ஒரு பாட்டு இப்படி ஆகிடுச்சி.. அடுத்த பாட்டு கண்டிப்பா நல்லா இருக்கும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

அப்படி வெளிவந்த பாடல்தான் ‘சின்ன சின்ன கண்கள்’. விஜயின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியானது. மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை ஏஐ டெக்னாலஜி மூலம் அந்த பாடலில் கொண்டு வந்திருந்தார்கள். இந்த பாடலை பவதாரிணியை வைத்து பாட வைக்க திட்டமிட்டோம். ஆனால், அவர் இறந்துவிட்டார். அதனால்தான் ஏஐ டெக்னாலஜி மூலம் அவரின் குரலை கொண்டு வந்தோம் என ஃபீல் செய்து பேசி இருந்தார் யுவன்.

GOAT

GOAT

ஆனால், இந்த பாடலும் பெரிதாக விஜய் ரசிகர்களை கவரவில்லை. இதுவரை 10 மில்லியன் வீயூஸை கூட அந்த வீடியோ தாண்டவில்லை. இந்நிலையில், அந்த படத்தில் இடம் பெற்ற 5 பாடல்களில் முக்கிய 2 பாடல்கள் இதுதான். இதுவே நல்லா இல்லை. மத்த 3 பாடல்களும் சுமார் ரகம்தான் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

எனவே, கோட் படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவராது என்றே சொல்லப்படுகிறது. பாடல்கள் கவரும்படி இல்லை என்றாலும் கதை, திரைக்கதையில் உள்ள சுவாரஸ்யம் இப்படத்தை ஓட வைக்கும் என நம்பப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top