லொள்ளு சபா குழுவினரை மிரட்டிய எஸ்.ஏ.சி!! தளபதிக்கு ஐஸ் வைத்த விஜய் டிவி… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து 2008 வரை, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியை நம்மால் மறந்திருக்கவே முடியாது. மிகவும் பிரபலமாக ஓடிய திரைப்படங்களை Spoof செய்து ரசிகர்களை மகிழ்வித்து, பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக “லொள்ளு சபா” திகழ்ந்தது.
சந்தானம், மனோகர், சுவாமிநாதன், மதுமிதா, யோகி பாபு, ஜீவா, ஆகிய பல காமெடி நடிகர்கள் “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்கள்தான். எப்போதும் பல பிரபலமான திரைப்படங்களை Spoof செய்யும் “லொள்ளு சபா” குழுவினர் பல விஜய் திரைப்படங்களையும் கேலி செய்துள்ளனர். குறிப்பாக அவர்கள் வைக்கும் டைட்டில்கள் மிகவும் காமெடியாக இருக்கும்.
“கில்லி” திரைப்படத்திற்கு “ஜல்லி” என்று டைட்டில் வைத்திருந்தார்கள். “படையப்பா” திரைப்படத்திற்கு “வடையப்பா” என்று டைட்டில் வைத்திருந்தார்கள். இவ்வாறு டைட்டிலிலேயே பங்கமாய் கலாய்க்கத் தொடங்கிவிடுவார்கள். குறிப்பாக அவர்கள் அவ்வாறு கலாய்ப்பது யார் மனதையும் புண்படுத்துவது போல் இருக்காது என்பதுதான் அந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் மாஸ் ஹிட் ஆன “போக்கிரி” திரைப்படத்தை “பேக்கரி” என்ற பெயரில் spoof செய்திருந்தார்கள். அப்போது விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் “லொள்ளு சபா” குழுவினரை அழைத்து மிரட்டினாராம். இது குறித்து பிரபல காமெடி நடிகரான “லொள்ளு சபா” சுவாமிநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி!!… புடவை கட்டிக்கொண்டு வலம் வந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள்… என்ன காரணம் தெரியுமா?
“லொள்ளு சபாவில் போக்கிரி திரைப்படத்தை spoof செய்தோம். எஸ்.ஏ.சி சார் எங்களை எல்லாம் மிரட்டத் தொடங்கிவிட்டார். அப்போது லொள்ளு சபா நிகழ்ச்சியின் இயக்குனர், எஸ்.ஏ.சியை சந்திக்க சென்றார். அங்கே அவர் ‘இது என்னுடைய தவறு இல்லை, நான் ஊரில் இல்லை. குழுவில் இருக்கும் நபர்கள்தான் அந்த தொடரை இயக்கினார்கள்’ என கூறி தப்பித்து விட்டார்.
அதன் பின் விஜய் தொலைக்காட்சி நிறுவனம், விஜய்யை அழைத்து ஒரு விழா ஏற்பாடு செய்தனர். அதில் விஜய்யை புகழ்வது போல் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அவரை சமாதானப்படுத்தினார்கள்” என்று அப்பேட்டியில் சுவாமிநாதன் கூறியுள்ளார். எனினும் அதன் பின் விஜய் தன்னுடைய “குருவி” திரைப்படத்தில் நடிக்க “லொள்ளு சபா” ஜீவாவிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.