விஜய்க்கு பிடித்த எண் இதுதானாம்! கூட்டிக் கழிச்சு பாருங்க.. சரியா வரும்
Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இன்று தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் விஜய். கட்சியின் கொடி அறிமுக விழாவில் கட்சி தொண்டர்கள் மற்றும் விஜயின் பெற்றோர்கள் என திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கொடியானது சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கலரில் நடுவில் வாகை மலருடன் அதன் இரு பக்கமும் போர் யானை பொறிக்கப்பட்ட சின்னத்தில் அமைந்திருக்கிறது. இந்த கொடியின் விளக்கம் என்ன என்பதை ஒருநாள் சொல்கிறேன் என கூறியிருக்கிறார் விஜய். அது மட்டுமல்லாமல் கட்சியின் கொள்கைகள் என்ன என்பதையும் கட்சி மாநாடு சமயத்தில் தெரிவிக்கிறேன் என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:தங்கலான் வெற்றி வெற்றின்னு சொல்லி யாரை ஏமாத்துற… பயில்வான் காட்டம்
கொடியை அறிமுகப்படுத்திய பிறகு கட்சி பாடலும் ஒலிக்கப்பட்டது. ‘தமிழன் கொடி பறக்குது’ என ஆரம்பித்த அந்த பாடலை பிரபல சினிமா பாடல் ஆசிரியர் விவேk எழுதியிருக்கிறார். இந்த பாடலுக்கு இசை அமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். இப்போதுள்ள இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் பாடல் சினிமா பாணியில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
இந்த நிலையில் விஜய்க்கு பிடித்தமான எண் எது என்பது இன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. விஜய்க்கு மிகவும் பிடித்த எண் 4 தானாம். ஏனெனில் இன்று கொடி அறிமுகப்படுத்திய நாள் 22. அதை கூட்டும் போது கிடைப்பது எண் 4.
இதையும் படிங்க: வாழை மாதிரி படம் தான் சமூகத்துக்கு தேவை… நெல்சன் பேசியது அருவருப்பு..!
அவர் இன்று பயணித்து வந்த காரின் எண் 1111. இதை கூட்டும் போதும் கிடைப்பது 4. அவர் பிறந்த தேதியும் 22, அதை கூட்டும் போதும் கிடைப்பது 4. ஆகையால் விஜய்க்கு பிடித்த எண் 4 என சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
இனிமேல் தமிழகமெங்கும் நம் கொடிதான் பறக்க வேண்டும் என்பதை பாடலின் இறுதியில் சூசகமாக தெரிவித்திருக்கிறார் விஜய். பாடலின் இறுதியில் தமிழ்நாடு மேப் முழுவதும் விஜயின் கட்சி கொடி பறப்பதுமாதிரி வீடியோவில் காட்டியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: இது திருப்பி கொடுக்கும் நேரம்!.. விஜயின் அரசியல் எண்ட்ரி பற்றி கீர்த்தி சுரேஷ் அடித்த பன்ச்!