டையலாக்க கேட்டா எதையோ தாரான்... யார்ரா இவன்..? படபிடிப்பில் நொந்து கொண்ட விஜய்...
தமிழ் சினிமாவில் அனல் பறிக்கும் இயக்குனராக மாறி வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் பெரிய தாக்கத்தையே ரசிகர்களிடமும் திரைப்பிரபலங்களிடமும் ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
மாநகரத்தில் ஆரம்பித்த இவரது பயணம் தொடர் வெற்றிப் பயணங்களாக மாறி ஒரு சிம்மாசனம் போட்டே அமர்ந்து கொண்டார். இந்த நிலையில் லோகேஷை பற்றி நடிகர் விஜய் நொந்து கொண்ட ஒரு சம்பவத்தை விஜய் டிவி புகழ் தீனா அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே விஜய் நடிப்பில் ஒருவான மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் தான் இயக்கியிருந்தார். அந்த நேரத்தில் ஸ்கிர்ப்ட் பேப்பரை முன்னாடியே தருவதில்லையாம் லோகேஷ். ஒரு சமயம் விஜய் லோகேஷிடம் டையலாக் என்ன என்று கேட்டுள்ளார். உடனே ஒரு பேப்பரை எடுத்து அந்த ஸ்பாட்டிலயே எழுதி இது தான் என்று கொடுத்துள்ளார்.
இதை விஜய் தீனாவிடம் ஒரு அசிஸ்டெண்ட் டைராக்டரா இருந்து டைரக்டாராகலாம் அல்லது ஷார்ட் ஃபிலிம்ஸ் எடுத்து டைரக்டராகலாம். யார்ரா இவன்? பேங்க்-ல இருந்து வந்து மாநகரம் எடுத்து அதன் பின் கைதி அப்புறம் மாஸ்டர்-னு வந்து நிற்கிறான். ஸ்கிரிப்ட் பேப்பர் கேட்டா ஸ்பாட்ல எழுதி தாரான் என்று புலம்பினாராம் விஜய்.