விஜயின் சினிமா பரிணாம வளர்ச்சியும் படங்களும்

நடிகர் விஜய் கடந்த பல வருடங்களாக நடித்துக்கொண்டுள்ளார் அவரது தந்தையின் படங்கள் பலவற்றில் சிறுவயது குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் வெற்றி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் சிறுவயது பையனாக விஜய் நடித்துள்ளார். ஓரளவு கொஞ்சம் பெரிய பையனாக 15 வயது பையன் தோற்றத்தில் விஜய் நடித்த படம் அவரது தந்தை இயக்கத்தில் வந்த படம் இது எங்க நீதி படம் இந்த படத்தில் சிறிது நேரம் வந்து போவார் அவர் முதலில் ஹீரோவாக நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற படம் நாளைய தீர்ப்பு . முதல் படமே ஒரு சுமாரான வெற்றிப்படம்தான் விஜய்க்கு.

vijay-8

ஆரம்பகால படங்களில் தன் மகன் விஜயை சினிமாவில் நிலை நிறுத்துவது எப்படி என்ற கணக்கில் அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர், கமர்ஷியலான சண்டைக்காட்சிகளை கொண்ட கவர்ச்சி படங்களை இயக்கினார்.

அவரது ரசிகன் படம் விஜய், சங்கவி ஜோடிக்காகவே நீண்ட நாட்கள் ஓடியது. சங்கவியின் கவர்ச்சி இப்படத்துக்கு ப்ளஸ். இந்த படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கவர்ச்சி காட்சியை எஸ்.ஏ சி வைத்திருந்தார் அதுதான் கதாநாயகிக்கு முதுகு தேய்க்கும் காட்சி. இது போல படங்களில் வரும் பல கவர்ச்சி காட்சிகளுக்காக படம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பாக தேவா இசையில் ரசிகன் படத்தில் இடம்பெற்ற சில்லென சில்லென நீர்த்துளிபட்டு என்ற கவர்ச்சி டூயட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என சொல்லலாம்.

friends-vijay

இதற்கு பிறகு தனது மகனின் முன்னேற்றத்திற்காக தனக்கு மிகவும் வேண்டிய ஹீரோவான விஜயகாந்தை செந்தூரப்பாண்டியில் நடிக்க வைத்து விஜய்யின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவினார். இந்த படத்தில் யுவராணியை கதாநாயகியாக்கி விஜய்யுடன் கவர்ச்சி கபடி எல்லாம் நடத்தினார். இந்த படத்தில் இடம்பெற்ற யுவராணி, விஜய் கபடி ஆட்டம் ரசிகர்களை ரசிக்க வைத்தது எனலாம். மேலும் விஜயகாந்த் நடிப்பு, யுவராணி கவர்ச்சி போன்ற காரணங்களால் செந்தூரப்பாண்டியும் விஜய்க்கு வெற்றிப்படம்தான்.

vijay-sangavi

தொடர்ந்து தந்தையின் இயக்கத்தில் விஷ்ணு படத்தில் நடித்தார் இதிலும் சங்கவி ஜோடி .இந்த படத்துக்குஅடுத்ததாக நடிகர் திலகம் சிவாஜியை இணைத்து ஒன்ஸ்மோர் படத்தை இயக்கினார். விஜயகாந்த், சிவாஜி, போன்ற முன்னணி நடிகர்கள், கவர்ச்சிக்கு சங்கவி, யுவராணி, ஸ்வாதி என நாயகிகளை விஜய் படத்தில் நடிக்க வைத்து விஜய்யின் படங்களை பூஸ்ட் செய்து வந்தார் எஸ்.ஏசி. விஜய்யிடம் இருந்த இன்னொரு ப்ளஸ் அவரது பாடல் பாடும் திறன். தேவா இசையில் வந்த தொட்டபெட்ட ரோட்டுமேல, பம்பாய் ஷெட்டி சுக்கா ரொட்டி, ஊர்மிளா ஊர்மிளா போன்ற பாடல்களை பாடினார். இந்த பாடல்கள் திரையில் வரும்போது இந்த பாடலை பாடியது உங்கள் விஜய் என திரையில் தனது மகன் பெயரை திரையில் காண்பிப்பார் எஸ்.ஏ.சி அந்தக்காலங்களில் படம் பார்த்த ரசிகர்களுக்கு இந்த விசயம் பரிச்சயம் ஆகி இருக்கும். இளையராஜா இசையில் காதலுக்கு மரியாதை படத்தில் ஓ பேபி பேபி பாடலை பாடினார். அதன் பின் பல்வேறு படங்களில் பாடிவிட்டார். தற்போது வரை சத்தமே இல்லாமல் பல பாடல்களை பாடிவிட்டார் விஜய்.

vijay-sangavi1

விஜய்யின் வளர்ச்சிக்கு பல விசயங்களைசேர்த்து விஜய்யின் வளர்ச்சிக்கு உதவினார் அவரது தந்தை எஸ்.ஏ.சி. ஆரம்பத்தில் வந்த விஜய் படங்கள் ஓரளவு நன்றாகவே இருந்தன, ஓரளவு வெற்றி பெற்ற படங்களாகவே இருந்தன. இருப்பினும் விஜய்க்கு பெரிய அளவில் இப்படங்கள் மூலமாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. 90களின் இறுதியிலே அடுத்தடுத்து பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை படங்களின் மூலம் விஜய் உச்ச வெற்றிகளை தொட்டார். இந்த படங்கள் 200 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது. இதன் மூலம் விஜய் முன்னணி நடிகர் ஆனார். இந்த படங்களின் வெற்றிக்கு பிறகு விஜய் தனது தந்தை படங்களில் அதிகமாக நடிக்காவிட்டாலும் மற்ற இயக்குனர்களின் சுமாரான படங்களிலே நடித்து வந்தார் இருப்பினும் முந்தைய சங்கவி, ஸ்வாதி, யுவராணியில் கவர்ச்சி அம்சம் இல்லாத படங்களாகவே இருந்தன. காதலுக்கு மரியாதை வெற்றிக்கு பிறகு 98 முதல் 2003 வரை வந்த விஜயின் பல படங்கள் சூப்பர் பாஸ்ட் ட்ரெயினாக இல்லாமல் பாஸெஞ்சர் டிரெயினாகவே வந்தன. பெரிய வெற்றிகளும் அமையவில்லை பெரிய தோல்விகளும் இக்காலங்களில் விஜய்க்கு அமையவில்லை எனலாம். இக்காலங்களில் விஜய் நடித்த ப்ரண்ட்ஸ், குஷி போன்ற படங்கள் வெளியாகின பெரும் வெற்றி பெற்றன. இருப்பினும் அவருக்கு சூப்பர் நடிகர் அந்தஸ்து கிடைக்கவில்லை வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகனாக மட்டும் விளங்கினார்.

vijay-yuvarani

2003ல் தீபாவளிக்கு வெளியாகிய திருமலை படத்தின் மூலம் தான் விஜய்யின் வெற்றிக்கணக்கு துவங்கியது. திருமலை படத்தில் அதிரடியாக நடித்திருந்தார் விஜய். கடந்த 2003 தீபாவளிக்கு வெளியாகி இப்படம் ஓரளவு பேசப்பட்டது. இருப்பினும் அந்த வருட தீபாவளிக்கு பிதாமகன் போன்ற பிரமாண்ட படங்கள் வெளிவந்து இருந்ததால் இப்படம் ஓரளவுதான் வெற்றி பெற்றது.

sangavi

அடுத்ததாக ஏப்ரல் 17ல் 2004ம் ஆண்டு வெளியான கில்லி படம் தான் விஜய்க்கு பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்த முதல் படம் எனலாம். ஒக்கடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இது. இருப்பினும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி விஜய் ரசிகர்களுக்கு ஏற்றபடி இப்படம் தமிழுக்கேற்றபடி இயக்கப்பட்டிருந்தது. 50 கோடிக்கும் மேல் இப்படம் ரசிகர்களுக்கு வருமானத்தை ஈட்டித்தந்தது எனலாம்.

master-vijay

அதன் பின் விஜய்க்கு ஏறுமுகம் தான், மாதேஷ் இயக்கத்தில் வந்த மதுர, பேரரசு இயக்கத்தில் வந்த திருப்பாச்சி , சிவகாசி போன்ற படங்கள் விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்ற அடையாளத்தை கொடுத்தன. அதிலும் திருப்பாச்சி படத்தில் பட்டாசு பாலு, பான்பராக் ரவி, சனியன் சகடை என்ற மூன்று கொடூர வில்லன்களை விஜய் அழிக்கும் கதை விஜய் ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது இப்படம் எனலாம்.

beast-4

தொடர்ந்து விஜய் நடித்த போக்கிரி, துப்பாக்கி, கத்தி,வேட்டைக்காரன், தெறி,மாஸ்டர் என அனைத்து படங்களும் தெறிக்க விடுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்புக்கும் பிடித்த மாஸ் ஹீரோ இவர்தான் என்றாகிவிட்டது. கொரொனா காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் அடைக்கப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் வருட இறுதியில் தான் திறக்கப்பட்டது. இருப்பினும் தியேட்டர்கள் காற்று வாங்கிய நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டர்களுக்கு வந்த பிறகுதான் மீண்டும் தியேட்டர்கள் பூஸ்ட் அப் ஆகி மக்கள் தியேட்டர்களுக்கு குவிய தொடங்கினர் எனலாம்.

thalapathy-66

தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக தில் ராஜூ இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுவிட்ட விஜய் பீஸ்ட் படத்துக்கு மட்டும் 120 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

விஜய்யின் சினிமா பரிணாம வளர்ச்சியை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு அவரது அடுக்கடுக்கான வளர்ச்சியும் முன்னேற்றமும் புரியும்.

Rohini
Rohini  
Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it