Connect with us

மனுஷன் இவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்காரே!.. கோட் படத்துல அதையும் முடிச்சிட்டாராம்!.. என்னதான் பிளான்!..

latest news

மனுஷன் இவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்காரே!.. கோட் படத்துல அதையும் முடிச்சிட்டாராம்!.. என்னதான் பிளான்!..

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பது இதுதான் முதல் முறை. மங்காத்தா படத்திற்கு பின் விஜயை வைத்து படமெடுக்க வெங்கட்பிரபு பலமுறை முயற்சி செய்தும் நடக்கவில்லை. லியோ படத்திற்கு பின்னரே இது சாத்தியமாகி இருக்கிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகி இருக்கிறது. ஆனால், ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான விசில் போடு பாடல் ரசிகர்களை கவரவில்லை. இதன் காரணமாக இன்ஸ்டாகிராமிலிருந்தே வெளியேறினார் யுவன்.

இதையும் படிங்க: கொய்யால தல யாரு! முடிஞ்சா கொடுங்க… சிறுத்தை சிவா கூட்டணியில் இருக்கும் சிக்கல்

விஜய் முன்பு போல் இல்லாமல் மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறார். கோட் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது ஹெச்.வினோத்திடம் கதை கேட்டு ஓகே செய்தார். அதோடு, வெங்கட்பிரபு மெதுவாகவே படமெடுப்பவர். ஆனால், அவரை விடாமல் துரத்தி வேகமாக செயல்படவைத்து படம் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

விஜய் நடிக்கும் காட்சிகள் பல நாட்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. அதன்பின் இலங்கை சென்று அங்கு மைக் மோகன் நடித்த சில காட்சிகளை படமாக்கினார் வெங்கட்பிரபு. அனேகமாக இன்னும் சில நாட்களில் கோட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

goat

goat

ஏற்கனவே கோட் படத்தின் முதல் பாதியின் டப்பிங்கை பேசி முடித்துவிட்டார் விஜய். இரண்டாம் பாதியின் டப்பிங்கை ஜுலை மாதம் அவர் பேசுவார் என சொல்லப்பட்ட நிலையில், இப்போது அந்த வேலையையும் முடித்துவிட்டாராம் விஜய். எனவே, கோட் படத்தை பொருத்தவரை விஜயின் வேலை முழுவதுமாக முடிந்துவிட்டதால் அடுத்து ஹெச். வினோத் பட வேலைகள் துவங்கவுள்ளது.

வருகிற ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்த நாள் என்பதால் அவரின் ரசிகர்களை குஷிப்படுத்த கோட் படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட இருக்கிறது. விஜய் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதால் பட வேலைகளை வேகமாக முடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

To Top