இதுதான் என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த சம்பவம்!.. மேடையில் ரசிகர்களை கண்கலங்க வைத்த விஜய்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவின்
பெருமையாகவும் திகழ்ந்து வருகிறார். விஜய் சம்பாதித்து வைத்த செல்வம் ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு அதிகம் வாய்க்கப் பெற்றவராக விளங்கி வருகிறார்.
இத்தனை பெருமைக்குரிய விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரையே சேரும். நாளைய தீர்ப்பு படத்தில் இருந்து விஜயை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிற்காக தயார்படுத்தி இன்று ஒட்டுமொத்த தமிழ் நாடும் திரும்பி பார்க்க வைத்த பெருமைக்கு சொந்தக்காரரே சந்திரசேகர் தான்.
தொடர்ந்து பல படங்களை விஜய்க்காக இயக்கி அந்தப் படங்களை வெற்றியடையவும் செய்தார். இப்படி பல படங்களில் தனது முகத்தை காட்டி வந்த விஜயை திரும்பி பார்க்க வைத்த படமாக அமைந்தது ‘செந்தூரப் பாண்டி’ படம் தான். அந்தப் படத்தில் விஜய்காக விஜயகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்து விஜய்க்கு ஒரு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தார் கேப்டன்.
இந்த நிலையில் விஜயின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் ரசிகர்கள் பலர் அவர்களுக்கு விருப்பமான கேள்விகளை கேட்க விஜய் சுவாரஸ்யமான பதில்களை கூறியிருக்கிறார். அதில் விஜய்க்கு பிடித்தமான நடிகர்கள், நடிகைகள் யார் என கேட்க தனக்கு பிடிக்காத நடிகர்களே இல்லை என கூறியிருக்கிறார்.
மேலும் உங்களுக்கு மனதளவில் பாதித்த விஷயம் எதாவது இருக்கிறதா? என்று ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு பதிலளித்த விஜய் ‘எனக்கு மனதளவில் பாதித்த விஷயம் என்றால் அது என் தங்கை வித்யா இறந்த சம்பவம் தான். அது தான் என்னை மிகவும் பாதித்தது. ஆனால் அவளை நாங்கள் புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம், விதைத்ததனால்தான் இன்று எனக்கு இவ்ளோ தங்கைகள் இருக்கின்றனர்’ என ரசிகர்களை ஆனந்தக் கண்ணீரில் திகைக்க வைத்தார்.
இதையும் படிங்க :நடிகரிடம் சண்டை போட்டு விஷம் குடித்த சந்திரபாபு!.. வாய்ப்புக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்காரு!…