ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கிய விஜய் படங்கள்

by sankaran v |
ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கிய விஜய் படங்கள்
X

Vijay in Puli Movie

இளைய தளபதியில் இருந்து தளபதியாக ப்ரொமோஷன் ஆகி தமிழ்சினிமாவில் இன்று ஒரு முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரது துறுதுறு நடிப்பை ரசிப்பார்கள். படத்தில் இவர் வந்தால் போதும். படம் ஓடிவிடும் என்று சொல்லும் ரசிகர்கள் கூட்டம் வழக்கம்போல இவருக்கும் உண்டு.

ஆனால் தமிழ் ரசிகர்கள் போல ரசனை உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது. நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் என்றால் எப்பேர்ப்பட்ட நடிகர் நடித்து இருந்தாலும் படத்தை வெற்றிப்படமாக்கி விடுவார்கள். அதே போல் எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்து இருந்தாலும் படத்தின் கதை அம்சம் அவர்களைக் கவரவில்லை என்றால் அந்தப் படத்தை ப்ளாப் ஆக்கியும் விடுவார்கள்.

அந்த வகையில் நடிகர் விஜயின் படங்களில் எதிர்பார்த்து அதிகம் வரவேற்பைப் பெறாத படங்களில் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

ஆதி

aadhi vijay

2006ல் வெளியான இப்படத்தை ரமணா இயக்கினார். இப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்துள்ளார். த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சாய்குமார், விவேக், மணிவண்ணன், நாசர், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இந்தப்படமும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

குருவி

Vijay In kuruvi movie

2008ல் தரணி இயக்கத்தில் உருவான மசாலா படம் குருவி. விஜய் நடித்த படங்களில் எதிர்பார்த்து ஓடாத படங்களில் இதுவும் ஒன்று. திரிஷா, சுமன், விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, மணிவண்ணன், மாளவிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

வித்யாசாகரின் இசையில் மொழமொழன்னு, பலானது பலானது, டன்டானா டர்னா ஆகிய குத்துப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் பல காட்சிகள் பரபரப்பாக இருந்த போதும் ரசிகர்களை படம் கவரவில்லை.

வில்லு

Vijay and Nayanthara in Villu movie

2009ல் பிரபுதேவாவின் இயக்க, நடிகர் விஜய் நடிக்க, தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்த படம் வில்லு. பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியைப் பெறவில்லை.

விஜய் உடன் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், வடிவேலு, மனோஜ் கே.ஜெயன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமன், கீதா, வையாபுரி, தாமு, ஆர்த்தி, ரஞ்சிதா என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது. டேடி மம்மி, தீம்தனக்கா தில்லானா ஆகிய குத்துப் பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன. 2009ல் இப்படம் வெளியானது.

சுறா

vijay and tamanna in SURA

2010ல் வெளியான இப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கினார். தமன்னா தான் கதாநாயகி. வடிவேலு, ராதாரவி, ஸ்ரீமன், மதன்பாபு, இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையில் பாடல்கள் சுமார் ரகம். நான் நடந்தால் அதிரடி பாடல் மட்டும் அதிரடியாக உள்ளது.

புலி

சிம்புதேவன் இயக்கத்தில் 2015ல் வெளியான இப்படத்தில் விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி, பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையில் வெளியான இந்தப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தப்படத்தில் தம்பி ராமையா, ரோபோசங்கர் மற்றும் கருணாஸ் காமெடியர்களாக நடித்துள்ளனர். ஜிங்கிலியா ஜிங்கிலியா என்ற பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story