சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக வலம் வந்தவர். நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக விளங்கியவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவரது உயர்வுக்கு அவரது சிறப்பான நடிப்பு மட்டுமல்லாது படப்பிடிப்பிற்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பும் ஒரு காரணம். அதாவது அவரது கடைசி காலம் வரை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னமே படப்பிடிப்புத் தளத்தில் ஆஜர் ஆகிவிடுவார்.
சிவாஜி கணேசனின் கடைசி திரைப்படமாக அமைந்த திரைப்படம் “படையப்பா”. அச்சமயத்தில் சிவாஜி கணேசனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. ஆனாலும் அத்திரைப்படத்தில் அவர் நடிப்பதாக இருந்த முதல் காட்சிக்கு காலை 7 மணிக்கே படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றுவிட்டார். அத்திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூட லேட் ஆகத்தான் வந்தாராம். இவ்வாறு தனது உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் சினிமாவிற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சிவாஜி கணேசன்.
இந்த நிலையில் சிவாஜி கணேசனை போலவே விஜய்யும் அவ்வாறு நேரத்தை கடைப்பிடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். இப்போது வரை விஜய் தனது திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்தார் என்ற புகார் ஒன்று கூட இல்லை என கூறப்படுகிறது. இதற்கு உதாரணமான ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
விஜய் நடித்த “பகவதி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் மேட்டுப்பாளையத்தில் சில காட்சிகள் எடுக்கப்பட்டதாம். அன்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து படக்குழுவினர் கிளம்பிவிட்டனர். அதற்கு அடுத்த நாள் காலை சிவாஜி கார்டன்ஸ் பகுதியில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டியதாக இருந்ததாம்.
விஜய், இயக்குனர் வெங்கடேஷிடம், “சார், ரெண்டு நாள் கழிச்சிதானே அடுத்து ஷூட்டிங்” என்று கேட்டாராம். அதற்கு இயக்குனர், “சார், இல்லை சார், நாளைக்கே பாடல் காட்சி படமாக்க போகிறோம்” என்று கூறினாராம். விஜய், “அப்படியா?” என கேட்க, அதற்கு இயக்குனர், “சார் நீங்க காலையில 9.30 மணிக்கு வந்தா போதும்” என்று கூறினாராம்.
அதற்கு அடுத்த நாள் பாடல் காட்சிகளை படமாக்கும் பணிகள் தொடங்கியது. காலை 9 மணி ஆகியும் விஜய் படப்பிடிப்பிற்கு வரவில்லையாம். “9.30 மணிக்குத்தானே அவரை வரச்சொன்னோம். இன்னும் நேரம் இருக்கிறதே” என நினைத்துக்கொண்டாராம் இயக்குனர்.
ஆனால் அவர் எதிர்பாராதபடி விஜய், 8 மணிக்கே படப்பிடிப்பிற்கு வந்துவிட்டாராம். ஒரு ஓரத்தில் சேர் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாராம். ஆனால் இயக்குனர் அவரை பார்க்கவே இல்லையாம். ஒரு உதவி இயக்குனர் ஓடிவந்து, “விஜய் சார் 8 மணிக்கே வந்துட்டார்” என கூறியதற்கு பிறகுதான் அவருக்கு தெரியவந்ததாம்.
இதையும் படிங்க: தலதான் அடுத்த சி.எம்…தலைவர் ஆகுற தகுதி விஜய்க்கு கிடையாது!.. மீசை ராஜேந்திரனின் சர்ச்சை பேச்சு!..
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…