ரஜினியை அட்டர் காப்பி அடிக்கும் விஜய்!.. இதுல சூப்பர்ஸ்டார் ஆசை வேறயா?....

இந்திய சினிமாவின் உட்சபட்ட நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் தனது திரைப்படங்களில் பேசும் பன்ச் வசனங்கள் அன்று முதல் இன்று வரை சிறியவர் முதல் பெரியோர் வரை அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்ட ஒன்றாகும். பன்ச் வசனங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் ரஜினி.

Rajinikanth
பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து 1990ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த படம் பணக்காரன். இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து சுமர் 175 நாட்கள் ஒடி பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது. அதில் ஒரு வசனம் இடம்பெறும் ‘கண்ணா நான் முதல்ல எப்பவுமே வாங்கிக்குவேன்.. அப்புறம்தான் திருப்பி கொடுப்பேன். அன்பும் சரி அடியும் சரி..” என அப்படத்தில் ரஜினி பேசியிருப்பார்.

rajini
தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று திரைக்கு வர தயாராகிவிட்டது. அத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
அதில் ரஜினியின் பானியை பின்பற்றும் வகையில் அவர் பேசுவது போலவே வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ‘அன்போ..அடியோ..எனக்கு கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சி கொடுக்கனும்...ஏன்னு சொல்லு!.. நீ எதை கொடுத்தாலும் நான் அதை ட்ரீபிளா திருப்பி கொடுப்பேன்.” என்று வசனம் பேசியிருக்கிறார் விஜய். விஜய்தான் தற்போது சூப்பர்ஸ்டார் என பலரும் பேச துவங்கியுள்ளனர். இதற்கு விஜய் ரசிகர்கள் ஆதரவும், ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

vijay
இந்நிலையில், அவரை போலவே விஜய் வசனம் பேசியிருப்பது, சூப்பர்ஸ்டார் ஆகனும்னா ரஜினியைத்தான் விஜய் ஃபாலோ பண்ணனும் என பலரும் பேச துவங்கிவிட்டனர். ரஜினியை போலவே சினிமா விழாக்களில் குட்டிகதையையும் விஜய் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சந்திரபாபுவால் கண்ணதாசனுக்கு ஏற்பட்ட வேதனை!.. பொறுமை இழந்து கவிஞர் பண்ண காரியம்!..